Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

National Technology Day 2022: தேசிய தொழில்நுட்ப தினத்திற்கான...சிறப்பு காரணம் முக்கியத்துவம்...தெரியுமா?

Priyanka Hochumin May 11, 2022 & 07:15 [IST]
National Technology Day 2022: தேசிய தொழில்நுட்ப தினத்திற்கான...சிறப்பு காரணம் முக்கியத்துவம்...தெரியுமா?Representative Image.

National Technology Day 2022: இந்தியாவில் மே 11 தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்கான காரணம் என்ன? தெரிந்துகொள்வோமா!

ஏன் கொண்டாடப்படுகிறது?

இந்தியாவில் அணுகுண்டு சோதனை 1998 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. மேலும் ஐந்து அணுகுண்டு சோதனைகளில் மே 11 அன்று நடத்தப்பட்ட முதல் சோதனையை நினைவுகூரும் வகையில் இந்திய அரசாங்கம்  மே 11 ஆம் தேதி "தேசிய தொழில்நுட்ப தினமாக" கொண்டாடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

இந்திய பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் படைத்த சாதனைகளை நினைவுகூர இந்த நாள் கொண்டாடப்படும். எனவே, இந்த ஆண்டு இந்தியா அறிவியல், தொழிநுட்பம் மற்றும் அதனை சார்ந்த துறைகள் மூலம் நம் நாட்டின் முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்த 31 ஆம் ஆண்டு "தேசிய தொழில்நுட்ப தின"-த்தை கொண்டாடுகிறது.

 

 

இப்படி ஒரு சிறப்புமிக்க நாளை தனது கையெழுத்து மூலம் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தினார் அப்போதைய பிரதமர் - அடல் பிஹாரி வாஜ்பாய்.

இதன் முக்கியத்துவம் 

பொக்ரான் அணு ஆயுதச் சோதனை, விண்வெளிப் பொறியாளர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தலைமையில் நடத்தப்பட்டது. 

இந்த சோதனை அசாத்தியமான வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து பிரதமர் அடல் பிகார் வாஜ்பாய், நம் நாட்டை (இந்தியா) அணுசக்தி நாடாக அறிவித்தார். மேலும் மற்ற நாடுகளின் "அணுசக்தி கிளப்பில்" இணைந்த ஆறாவது நாடு என்னும் பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. 

கூடுதலாக, இந்நாளில் இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானமான ஹன்சா-1 வெற்றிகரமாக பறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நாளில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் (TDB) பல்வேறு செமினார் மற்றும் ஒர்க்ஷாப் ஏற்பாடு செய்து மக்களுக்கு விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும் தெரிவிக்கின்றனர். 

இந்நாள் கொண்டாடப்படும் தீம் 

இந்த ஆண்டு தேசிய தொழிநுட்ப தினத்தின் தீம் "நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறை" என்பதாகும். இதனை அறிவித்தவர் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்.

கடந்த ஆண்டு இந்நாளுக்கான தீம் "நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்" என்பதாகும். 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்