Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 80,438.40
-568.21sensex(-0.70%)
நிஃப்டி24,586.25
-163.60sensex(-0.66%)
USD
81.57
Exclusive

விசாகப்பட்டினம் - செகந்திராபாத் வந்தே பாரத் ரயில்: எத்தனை மணிக்கு புறப்படும்? டிக்கெட் விலை எவ்வளவு? | Visakhapatnam - Secunderabad Vande Bharat Train

Nandhinipriya Ganeshan Updated:
விசாகப்பட்டினம் - செகந்திராபாத் வந்தே பாரத் ரயில்: எத்தனை மணிக்கு புறப்படும்? டிக்கெட் விலை எவ்வளவு? | Visakhapatnam - Secunderabad Vande Bharat TrainRepresentative Image.

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்துவதற்காகவே 'வந்தே பாரத் திட்டம்' என்ற அதிவேக விரைவு ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இதுவே மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில்களை விட மிக வேகமாகவும், இலகுவாகவும் இருக்கிறது. இது பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன. 

ஜனவரி 15.2023 அன்றிலிருந்து இந்தியாவின் 8வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை விசாகப்பட்டினம் முதல் செகந்திராபாத் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் அதே பாதையில் செல்லும் மற்ற ரயில்களை விட 04.30 மணி நேரத்திற்கு முன்னதாகவே விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் சென்றடைந்துவிடுகிறது. இந்த பதிவில் விசாகப்பட்டினம் - செகந்திராபாத் வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிபரங்களை பார்க்கலாம். 

வழி: 

இந்த ரயில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இயக்கப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் செல்லும் இந்த ரயில் ராஜமுந்திரி, விஜயவாடா ஜங்ஷன், கம்மம் (Khammam) மற்றும் வாரங்கல் (Warangal) ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பொதுவாக விசாகப்பட்டினம் - செகந்திராபாத் [699 கி.மீ தூரம்] பயண நேரம் கிட்டத்தட்ட 13 மணிநேரம் ஆகும். ஆனால், வந்தே பாரத் வெறும் 8.30 மணி நேரத்தில் சென்றுவிடுகிறது. 

வந்தே பாரத் இரயில்

துவங்கப்பட்ட நாள்

இயங்கும் நாள்

தூரம்

பயண நேரம்

புறப்படும் / வந்தடையும் நேரம்

விசாகப்பட்டினம் - செகந்திராபாத் [எண்: 20833]

 

செகந்திராபாத் - விசாகப்பட்டினம் [எண்: 20834]

ஜனவரி 15, 2023

ஞாயிற்று கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இயங்கும்

699 கிமீ

08.30 மணி நேரம்

05.45 AM - 12.06 PM

 

03.00 PM - 11.30 PM

விசாகப்பட்டினம் - செகந்திராபாத் வந்தே பாரத் ரயில் நேர அட்டணை [எண்:20833]: 

தினமும் காலை 05.45 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 07.55 மணிக்கு ராஜமுந்திரி சென்ட்ரலை சென்றடையும். காலை 07.57 க்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 10.00 க்கு விஜயவாடா ஜங்ஷனை சென்றடையும். அங்கிருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு காலை 11.00 க்கு கம்மம் ரயில் நிலைத்தை அடையும். பின்னர், அங்கிருந்து 11.01 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.05 மணிக்கு வாரங்கல் ரயில் நிலைத்தை வந்தடையும். மீண்டும் 12.06 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 02.15 மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையைத்தை சென்றடையும்.

விசாகப்பட்டினம் - செகந்திராபாத் [எண்: 20833]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

விசாகப்பட்டினம்

-

05.45 AM

ராஜமுந்திரி

07.55 AM

07.57 AM

விஜயவாடா ஜங்ஷன்

10.00 AM

10.05 AM

கம்மம்

11.00 AM

11.01 AM

வாரங்கல்

12.05 PM

12.06 PM

செகந்திராபாத்

02.15 PM -

 

செகந்திராபாத் - விசாகப்பட்டினம் வந்தே பாரத் ரயில் நேர அட்டவணை [எண்:20834]:

மறுமார்க்கமாக செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 03.00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 04.35 மணிக்கு வாரங்கல் ரயில் நிலைத்தை வந்தடைகிறது. பின்னர், 04.36 க்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 05.45 மணிக்கு கம்மம் சென்ட்ரலையும், இரவு 07.00 மணிக்கு விஜயவாடா ஜங்ஷனையும் வந்தடைகிறது. இரவு 07.05 க்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 08.58 மணிக்கு ராஜமுந்திரி ரயில் நிலையத்தை வந்தடையும். இரவு 09.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு விசாகப்பட்டினத்தை வந்தடையும்.

செகந்திராபாத் - விசாகப்பட்டினம் [எண்: 20834]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

செகந்திராபாத்

-

03.00 PM

வாரங்கல்

04.35 PM

04.36 PM

கம்மம்

05.45 PM

05.46 PM

விஜயவாடா ஜங்ஷன்

07.00 PM

07.05 PM

ராஜமுந்திரி

08.58 PM

09.00 PM

விசாகப்பட்டினம்

11.30 PM -

 

கட்டணம்: 

இந்த ரயிலுக்கான டிக்கெட் கட்டணம் பயண வகுப்பை பொறுத்து மாறுபடும். அதன்படி, இந்த வந்தே பாரத் ரயிலில் விசாகப்பட்டினம் முதல் செகந்திராபாத் வரை செல்ல சேர் காரில் ரூ.1720 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் ரூ.364 உணவு கட்டணமும் அடங்கும். அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ.3120 வசூலிக்கப்படுகிறது. இதில் 419 ரூபாய் உணவு கட்டணமும் அடங்கும்.

மறுமார்க்கமாக, செகந்திராபாத் முதல் விசாகப்பட்டினம் வரை செல்ல சேர் காரில் உணவு கட்டண்ம் ரூ.364 சேர்த்து ரூ.1665 கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் உணவு கட்டணம் ரூ.419 சேர்த்து ரூ.3120 கட்டணமாக வசூலிக்கப்படும். உணவு தேர்வு என்பது இந்த ரயிலில் பயணிகளின் விருப்பம்தான். டிக்கெட் புக் செய்யும் போதே உணவு ஆப்ஷன் வேண்டாம் என தேர்வு செய்துவிட்டால் ரயில் பயண கட்டணத்தில் உணவு கட்டணம் வசூலிக்கப்படாது.

வந்தே பாரத் ரயில்

உணவு கட்டணம் இல்லாமல்

உணவு கட்டணம் சேர்த்து

சேர் கார்

எக்ஸிகியூட்டிவ் வகுப்பு

சேர் கார்

எக்ஸிகியூட்டிவ் வகுப்பு

விசாகப்பட்டினம் - செகந்திராபாத் [எண்:20833]

ரூ.1356

ரூ.2701

ரூ.1301

ரூ.3120

செகந்திராபாத் - விசாகப்பட்டினம் [எண்:20834]

ரூ.1300

ரூ.2701

ரூ.1665

ரூ.3120

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்