Wed ,Oct 23, 2024

சென்செக்ஸ் 80,081.98
-138.74sensex(-0.17%)
நிஃப்டி24,435.50
-36.60sensex(-0.15%)
USD
81.57
Exclusive

How to Take Care of Skin: கோடையின் தாக்கம் டல்லான  சருமமா! இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க அப்புறம் வேற மாறி தான் ஜாலியோ ஜிம்கானா தான்!

Manoj Krishnamoorthi March 30, 2022 & 13:30 [IST]
How to Take Care of Skin: கோடையின் தாக்கம் டல்லான  சருமமா! இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க அப்புறம் வேற மாறி தான் ஜாலியோ ஜிம்கானா தான்!Representative Image.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நாம் அறிந்தது தான், ஆனால் அந்த அழகைச் சரிவரப் பராமரிப்பது ஒரு கலை ஆகும். பொலிவான சருமமே முகத்தை அழகாக பிரதிபலிக்கிறது.  கோடைக் காலத்தில் அழகை பராமரிப்பு சற்று சிரமம் என்றாலும் சருமம் அதிகமாகப் பாதிப்பு அடையும், இவ்வாசகத்தில் சருமத்தை எப்படிப் பாதுகாக்கலாம் என்பதைக் காணலாம்.

கோடையில் சூரியனின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதால் சருமம் பொலிவை இழக்கும், மேலும் அது நமக்கு டல்லான லுக்கைத் தரும். அதிக நேரம் வெயிலில் திரிவதால் சரும எரிச்சல் ஏற்படும் அதனால் சருமத்தை எப்போதும் குளிர்ச்சியாக வைக்க வேண்டும். 

How to Take Care of Skin

சரும குளிர்ச்சிக்கு வெள்ளரி ஒரு நல்ல தீர்வாகும்.ஒரு முழு வெள்ளரிக்காய் எடுத்து துண்டுதுண்டாக நறுக்கி பேஸ்ட் போன்று தயார் செய்து முகத்தில் அப்பளை செய்யுங்கள், அதன்பின் 15 நிமிடங்கள் காத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இவ்வாறு தினமும் செய்தால் உங்கள் முகம் குளிர்ச்சி அடைவதுடன் பொலிவு பெறும்.  குறிப்பாக எண்ணெய் சருமம் கொண்டவர்கள் நிபுணரின் ஆலோசனையை அணுகுவது நல்லதாகும். 

கோடையில் வெளியே செல்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். தவிர்க்க முடியாத சூழலில் வெளியே செல்லும்போது சன் ஸ்கீரின் பயன்படுத்த வேண்டும். சருமத்தை வறட்சியடையாமல் ஈரப்பதத்துடன் வைப்பது மிகவும் அவசியம் அதற்கு மாய்ச்சரைஸர் ஒரு நல்ல தேர்வாகும்.க்ரீமைத் தேர்ந்தெடுக்கும்போது அதிக எண்ணெய் தன்மை இருப்பதைத் தவிர்க்கவும்.

அதிக நேரம் வெயிலில் இருக்கும் சூழலில் ஃபேஷ் வாஷ் (Face wash),  கிளின்சர் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். என்னதான் கோடையில் ஏசி, ஃபேன், ஏர் கூலர் வைத்தாலும் உடலை உள்ளிருந்து குளிர்ச்சி அடையச் செய்ய நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும், அதுவே மிகச் சிறந்த தீர்வாகும்.    
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்... 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்