Tue ,Oct 22, 2024

சென்செக்ஸ் 80,555.38
-595.89sensex(-0.73%)
நிஃப்டி24,583.95
-197.15sensex(-0.80%)
USD
81.57
Exclusive

Men's Beauty Tips in Tamil: சரும அழகை பராமரிப்பதில் ஆண்கள் செய்யும் தவறுகள்...!!

Nandhinipriya Ganeshan June 13, 2022 & 15:30 [IST]
Men's Beauty Tips in Tamil: சரும அழகை பராமரிப்பதில் ஆண்கள் செய்யும் தவறுகள்...!!Representative Image.

Men's Beauty Tips in Tamil: பெண்கள் மட்டும் மணிக்கணிக்கில் தயாராகும் காலம் போய்விட்டது. ஏனெனில், பெண்களுக்கு இணையாக ஆண்களும் சரும அழகை பராமரிக்கும் விஷயத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், அவர்கள் பெண்களை போல முறையான பராமரிப்பு வழிமுறைகளை கையாள்வது கிடையாது. ஆனால், ஆண்கள் ஒரு சில விஷயங்களை தவறாமல் ஃபாலோ செய்து வந்தாலே சரும அழகை பெருகேற்றிக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், முதுமையையும் தள்ளிப்போடலாம். அதற்கு நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

* சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுக்காக்கூடிய சன்ஸ்கிரீன் கிரீம்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். சன்ஸ்கிரீன் கிரீம்களை பெண்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று கிடையாது. ஆண்களும் பயன்படுத்தலாம். பெண்களை ஆண்கள் தான் அதிகம் வெளியில் செல்கிறார்கள். எனவே, வெளியே புறப்பட்டு செல்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே சருமத்தில் தடவிக் கொள்ள வேண்டும்.

* அதேபோல், ஆண்கள் பெரும்பாலும் எந்தவொரு கிரீமையும் சருமத்தில் தடவுவதற்கு விரும்பமாட்டார்கள். இதனால் சருமம் விரைவில் வறண்டு போய்விடும். இதனால், மென்மை தன்மை நீங்கி கடினமானதாக மாறும். எனவே, மென்மை தன்மையை பாதுகாக்க மாய்ஸ்சுரைசரை தினமும் பயன்படுத்தலாம். இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்து சரும வறட்சியை தடுக்கிறது. 

* தோல் சுருக்கத்தை போக்கும் "ஆண்டி ஏஜிங் கிரீம்களை ஆண்களும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். வைட்டமின் ஈ, சி, ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட கிரீம்களை தொடர்ந்து பயன்படுத்தினால், மிக கூடிய விரைவில் முதுமை தோற்றத்தை எதிர்கொள்வதை தடுக்கலாம். 

* பெண்களின் சருமத்தில் மட்டும் இறந்த செல்கள், அழுக்குகள் படிவதில்லை. ஆண்களின் சருமத்திலும் படியும். எனவே, ஆண்களும் அவ்வப்போது சருமத்தை "ஸ்கரப்" செய்ய வேண்டும். உங்களுக்கு விருப்பமான ஸ்கரப்களை பயன்படுத்தி இதை செய்யலாம். 

* ஆண்கள் முகத்திற்கு ஷேவிங் செய்யும்போது தவறாமல் கிரீம் பயன்படுத்த வேண்டும். சிலர் கிரீம் பயன்படுத்தாமல் குளியலுக்கு பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்துவார்கள். அது சரும வறட்சிக்கு வழிவகுக்கும். எனவே, ஷேவிங் செய்வதற்கு என்றே தயாரிக்கப்பட்ட ஷேவிங் கிரீம்களை மட்டும் பயன்படுத்துங்கள். ஷேவிங் செய்த பிறகு லோசனையும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். 


சம்மர் சீசன்ல முடி அதிகமாக கொட்டுதா..? கவலையை விடுங்க... இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க...


 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்