Tue ,Oct 22, 2024

சென்செக்ஸ் 80,555.38
-595.89sensex(-0.73%)
நிஃப்டி24,583.95
-197.15sensex(-0.80%)
USD
81.57
Exclusive

வடலூர் வள்ளலார் தைப்பூச திருவிழா!!!

Gowthami Subramani January 18, 2022 & 00:00 [IST]
வடலூர் வள்ளலார் தைப்பூச திருவிழா!!!Representative Image.

தைப்பூச திருவிழாவில் வடலூரில் உள்ள வள்ளலார் கோவிலின் சிறப்பாக, ஜோதி தரிசன விழா ஆண்டுதோறும் நடைபெறும்.

தைப்பூசத் திருவிழா

தைப்பூசம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது அறுபடை அப்பன் முருகன் ஆவான். அசுரர்களை வதைப்பதற்காக, முருகனின் கையில் பார்வதி தேவி அம்மையார் அளித்த ஞானவேல் தைப்பூச திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. போரில் எதிர்த்து நின்று அசுரர்களை வதைத்து தேவர்களுக்கு நல்வழிகாட்டிய முருகப்பெருமானுடைய அத்தகைய வேலை போற்றி வணங்கினால், எத்தகைய கெட்ட சக்தியும் நம்மை நெருங்காது என்பது ஐதீகம்.

மிகச் சிறப்பு வாய்ந்த தைப் பூசத் திருவிழாவை ஒட்டி, வடலூர் வள்ளலார் கோவிலில் ஜோதி தரிசனம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்புரியும். இந்த மாபெரும் அற்புதம், தைப்பூச திருவிழாவில் நடைபெறும்.

இராமலிங்க அடிகளார்

இராமலிங்க அடிகளார் 1823 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில், ராமைய்யா மற்றும் சின்னம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தினமும் ஒரு அடியாருக்கு உணவு பரிமாறிய பிறகே தான் உணவை உட்கொள்வது சின்னம்மையின் வழக்கமாக இருந்தது. தாயின் இந்த எண்ணம், நாளடைவில் தருமச்சாலையை உருவாக்கி, இன்று வரை ஏழையின் பசி போக்கும் இடமாக அமைந்துள்ளது. 1867 ஆம் ஆண்டு, இவர் உருவாக்கிய தருமச் சாலையில், இவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்று வரை பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது.

சத்திய ஞான சபை

இறைவன் ஒளிவடிவில் அருளும் விதமாக, சத்திய ஞான சபை ஒன்றை வள்ளலார் நிறுவினார். இத்திருச்சபையில், தாமரை மலர் போன்ற தீபம் முன்பகுதியில் ஏற்றப்பட்டுள்ளது. தினமும் இதனைப் போற்றும் விதமாக, காலை, மாலை என இரு வேளைகளிலும் பூஜை நடைபெறும்.

ஜோதி தரிசனம்

தைப்பூசத் தினத்தை போற்றும் வகையில், வடலூர் வள்ளலார் 1872 ஆம் ஆண்டு ஜோதி தரிசனத்தைத் துவக்கி வைத்தார். இன்று வரை, தைப்பூச திருவிழா அன்று, வடலூர் வள்ளலாரில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அங்கு இருக்கும் ஏழு திரைகள் நீக்கப்பட்டு, ஆறு நேரங்களில் ஜோதி தரிசனம் அருளிக்கப்படும்.

பல்வேறு சிறப்புப் பெயர்களால் போற்றப்படும் இந்தத் தளத்தை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மக்கள் ஆசி பெறுகின்றனர்.

2022 ஆம் ஆண்டான இந்த வருடம் கொரோனா சூழ்நிலையின் காரணமாக, பக்தர்கள் அனுமதியின்றி, ஜோதி தரிசனம் விமர்சையாக நடைபெற்றது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்