Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Updated New Community Feature in WhatsApp: வாட்ஸ்அப்பில் வெளியான புதிய அப்டேட்...இதில் இருக்கும் சிறப்பு என்ன தெரியுமா?

Priyanka Hochumin April 30, 2022 & 20:15 [IST]
Updated New Community Feature in WhatsApp: வாட்ஸ்அப்பில் வெளியான புதிய அப்டேட்...இதில் இருக்கும் சிறப்பு என்ன தெரியுமா?Representative Image.

Updated New Community Feature in WhatsApp: மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப், ஒரே மாதிரியான ஆர்வங்களைக் கொண்ட குழுக்களை ஒன்றிணைக்கும் 'சமூகம்' அம்சத்தை கூடிய விரைவில் வெளியிட போவதாக தெரிவித்துள்ளது. தி வெர்ஜ் இன் படி, முதலில் இந்த அம்சத்தை குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனர்கள் மற்றும் சில குழுக்களுக்கு வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான பயனர்கள் இந்த சமூகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். 

இதற்கான காரணம்

இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியதற்கான காரணம் என்னவென்றால், ஸ்கூல் முதல் வணிகம் வரை ஊழியர்கள் வாட்ஸ்அப்பில் தொடர்புகொள்வதை எளிமையாகவும், குழு நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள்.  மேலும் இதன் மூலம் பயனர்கள் பல்வேறு குழுக்களை நிர்வகிக்கவும் இது உதவியாக இருக்கிறது. 

பயனர்கள் ஒரே மாதிரியான கருப்பொருள் குழுக்களைச் (themed groups) சேர்ப்பதன் மூலம் ஒரு சமூகத்தை உருவாக்கலாம். பின்னர் அதை உருவாக்கிய நிர்வாகிகள் அந்த குழுவை நிர்வாகிகளாம் மற்றும் அனைத்து குழுக்களுக்கும் ஒரே நேரத்தில் செய்திகளை அனுப்பலாம். இதன் மூலம் அந்த குழுவுக்கு தொடர்புடைய தனிப்பட்ட உரையாடல்களைத் தொடரலாம் மற்றும் அதே நேரத்தில் அனைத்து குழுக்களுக்கும் ஒரே நேரத்தில் தேவையான குரூப் அறிவிப்புகளையும் காணலாம். 

வாட்ஸ்அப்-பின் புதிய மாற்றங்கள்

  • இந்த "கம்யூனிட்டி" அம்சம் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை ஆதரிக்கும்.
  • பிற பயன்பாடுகளைப் போல புதிய கம்யூனிட்டியை தேடவோ அல்லது கண்டறியவோ அதற்கான விருப்பத்தைச் சேர்க்கவில்லை என்று WhatsApp கூறியுள்ளது. 
  • இந்த புதிய மாற்றத்தின் மூலம் ஒரே நேரத்தில் ஐந்து குழுவிற்கு அனுப்புவதற்கு பதிலாக ஒரு குழுவிற்கு மட்டுமே அனுப்ப முடியும். 
  • சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வரும் ஸ்பேம் மற்றும் சட்டவிரோத பாலியல் கன்டென்ட் போன்ற தீங்கு விளைவிக்கும் போஸ்ட்கள் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பிளாட்ஃபார்ம் தனிப்பட்ட சமூக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் - சட்டவிரோத, வன்முறை அல்லது தவறான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால் தடை செய்யப்படுவார்கள்.
  • தனிப்பட்ட குழுக்கள் சமூகத்தின் அங்கமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் செயல்படும் விதத்தில்  WhatsApp மேம்பாடுகளை அறிமுகப்படுத்தும்.

Whatsapp மெசேஜ் ரியாக்ஷன் அம்சம்

இதை தவிர நிறுவனம் புதிய ரியாக்ட் அம்சத்திலும் செயல்படுவதாக தகவல் வெளியாகின. இது பயனர்கள் குழு செய்தியில் ஈமோஜியுடன் செயல்பாடு அனுமதிக்கிறது. இப்பொழுது உறுப்பினர்கள் தனித்தனியாக ஈமோஜி செய்தியை அனுப்பாமல் குறிப்பிட்ட செய்திக்கு எதிர்வினையாற்ற முடியும். GSMArena இன் படி, நிர்வாகிகள் குழுவில் உள்ள செய்திகளையும் நீக்க முடியும், பின்னர் அவை அனைவரின் சாதனங்களிலிருந்தும் அகற்றப்படும். File Sharing 2GB அளவு வரையிலான file-களை ஆதரிக்கும் வகையில் மேம்படுத்தப்படுவதாக கூறியுள்ளனர். மேலும் one-tap voice calling இப்பொழுது 32 உறுப்பினர்களை ஆதரிக்கும் போன்ற பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்