Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,291.90
285.29sensex(0.35%)
நிஃப்டி24,855.10
105.25sensex(0.43%)
USD
81.57
Exclusive

Google I/O Event 2022: இந்த வருஷம்...Google-ல இந்த அப்டேட்-லாம்...வரப்போகிறதாம்!

Priyanka Hochumin May 11, 2022 & 15:50 [IST]
 Google I/O Event 2022: இந்த வருஷம்...Google-ல இந்த அப்டேட்-லாம்...வரப்போகிறதாம்!Representative Image.

Google I/O Event 2022: இன்று Google I/O 2022 துவங்குகிறது, இந்தியா நேரத்தின் படி இரவு 10.30 மணிக்கு (Google I/O Event 2022 Date) ஆரம்பித்து நாளை வரை நடக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் இது காணொலி கட்சியாக நடத்தப்பட்டது. மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். 

இந்த மீட்டிங்கில் Alphabet மற்றும் Google CEO சுந்தர் பிச்சை உடன் சேர்த்து அவர்களின் முக்கிய குழு இதில் பங்கேற்று பல அறிவிப்புகளை வெளியிடையுள்ளனர். மலிவு விலை Pixel ஃபோன் உள்ளிட்ட புதிய ஹார்டுவேர்  வெளியீடு மற்றும் ஆண்ட்ராய்டு அண்ட் Wear OS இல் வரப்போகும் மேம்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு பின்பு கூகிள் டெவலப்பர்-மையப்படுத்தப்பட்ட முக்கிய உரை நடத்தப்படும். அங்கு நிறுவனத்தின் பிரைம் சாப்ட்வேர் அப்டேட் பற்றிய சில விரிவான தகவல்கள் தெரிவிக்கப்படும். 

ஆண்ட்ராய்டு 13 | Google I/O Event 2022

இந்த Google I/O Event 2022 இல் ஆண்ட்ராய்டு 13-ன் புதிய முன்னேற்றங்கள் மற்றும் மேம்பாடுகளை கூகுள் விளக்கும் என எதிர்பார்க்கலாம். கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 12-ல் நிறைய மேம்பாடுகளை செய்து மக்களுக்கு சுலபமான செயல்பட வழங்கிய கூகுள், இந்த ஆண்டின் இயங்குதளமானது பிப்ரவரியில் அதன் முதல் டெவலப்பர் மாதிரிக்காட்சியைப் (developer preview) பெற்றது. இது பிக்சல் 6 மாடல்களுக்கு ஆப்பிள் போன்ற ஸ்பேஷியல் ஆடியோ அம்சத்தையும், ஒரே eSIM இல் இரண்டு கேரியர் இணைப்புகளையும் பெற வாய்ப்புள்ளது. 

பிக்சல் வாட்ச் | Google I/O 2022 

Pixel Watch பற்றிய விவரங்கள் இன்று Google I/O 2022 நிகழ்வில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் நிறுவனம் தங்களுக்கென்று சொந்த ஸ்மார்ட்வாட்ச் ஹார்டுவேரில் வேலைப்பாடுகள் செய்துகொண்டிருக்கிறதாக வதந்திகள் கூறப்படுகின்றன. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இன்று செய்திகள் வெளியாகலாம். இது ஒரு வட்ட வடிவத்தைக் கொண்டிருப்பதாகவும், சமீபத்திய Wear OS வெர்ஸன் மூலம் இயங்குவதாகவும் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபிட்னஸ் டிராக்கிங் ஆதரவுக்கான ஃபிட்பிட் ஒருங்கிணைப்பு கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது. 

பிக்சல் 6a | Google I/O Event 2022

கூகுள் நிறுவனம் அதன் 2019-ஐ எடுத்து அதை மேம்படுத்தி, புதிய மலிவு விலை ஸ்மார்ட்போனாக Pixel 6a ஐ வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது செயல்பாட்டில் இருக்கும் பிக்சல் 6 மாடல்களைப் போலவே இந்த ஃபோனில் கூகுளின் டென்சர் சிப் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது பிக்சல் 6 போன்ற பின்புற வடிவமைப்பைக் கொண்டிருக்கும். இருப்பினும் புதிய பிக்சல் ஃபோனில் பிக்சல் 6 சீரிஸுக்கு பிரத்யேகமான சில அம்சங்கள் இல்லாமல் இருக்கலாம்.

பிக்சல் பட்ஸ் ப்ரோ | Google I/O 2022

இந்த வருடத்தின்  Google I/O 2022 உரையில் Pixel 6a மற்றும் Pixel Watch உடன் Pixel Buds Pro ஐ அறிமுகப்படுத்த கூகுள் முடிவெடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு தயாரிப்பாளரின் இந்த புதிய வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்கள் கார்பன், ஃபாக், லிமோன்செல்லோ மற்றும் உண்மையான சிவப்பு வண்ணங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

கூகுள் அசிஸ்டண்ட் மேம்பாடுகள் | Google I/O Event 2022

அமேசானின் அலெக்சா மற்றும் ஆப்பிளின் சிரிக்கு எதிராக கூகுள் அசிஸ்டண்டை சிறந்த தேர்வாக மாற்ற கூகுள் சில புதிய மேம்பாடுகளைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google சர்ச் முன்னேற்றங்கள் | Google I/O 2022

சர்ச் முடிவுகளை மேம்படுத்த Google சில மாற்றங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (machine learning) முன்னேற்றங்களை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்