Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,291.90
285.29sensex(0.35%)
நிஃப்டி24,855.10
105.25sensex(0.43%)
USD
81.57
Exclusive

How did Elon Musk Conquer Twitter: ட்விட்டரை கைப்பற்ற...எலான் மஸ்க் ஆடிய...சதுரங்க ஆட்டம்!

Priyanka Hochumin April 26, 2022 & 12:30 [IST]
How did Elon Musk Conquer Twitter: ட்விட்டரை கைப்பற்ற...எலான் மஸ்க் ஆடிய...சதுரங்க ஆட்டம்!Representative Image.

How did Elon Musk Conquer Twitter: இன்று உலகளவில் பேசப்படும் பரபரப்பான விஷயம் ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியது தான்? இதற்கு என்னென்ன பிளான்களை மஸ்க் களமிறக்கியிருப்பார் என்று பார்க்கலாம்.

ட்விட்டர் குழு: 

சுமார் 2 மாதங்களுக்கு மேலாக நடத்த இந்த வர்த்தக போராட்டத்தில் மஸ்க் எவ்வாறு ட்விட்டரை கைப்பற்றியிருப்பார் என்ற சந்தேகம் மக்களுக்கு அதிகளவில் இருக்கும். அந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கிடைத்துள்ள தகவல்கள் இதோ. 

Also ReadElon Musk Acquired Twitter: வெற்றிகரமாக ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க்...

உலகத்தில் மிக பெரிய பணக்காரரான எலான் மஸ்க் முதலில் ட்விட்டர் பங்கை கொஞ்சம் கொஞ்சமாக  வாங்கினார். எனவே, மொத்தமாக 5% பங்குகளை வைத்திருந்த மஸ்க், சமீபத்தில் 9.2 அளவிற்கு அதிகரித்துள்ளார். முதலில் வான்கார்ட் குழு தான் 8.8 சதவீதம் பங்குகளை வைத்து முதலிடத்தில் இருந்தது. ஆனால் மஸ்க் அதை பின்னுக்கு தள்ளி அதிக பங்குகளை வைத்திருக்கும் தனி நபராக விஸ்வரூபம் எடுத்தார். 

               

இவர் எதற்காக அதிக பங்கை வாங்கினார், ஒரு வேலை ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளாரோ என்று கேள்விகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் எனக்கு ட்விட்டரை வாங்க விருப்பம் இல்லை என்று கூறினார். அதன் பின்னர் ட்விட்டர் போர்டு உறுப்பினர் குழுவில் சேர மறுப்பு தெரிவித்தார். இவர் போர்டு உறுப்பினர் குழுவில் இருந்தால் 14.5% பங்குகளுக்கு மேல் வாங்க முடியும். மேலும் நிறுவனத்தின் முடிவுகளை எடுக்க நடக்கும் ஆலோசனையில் இவர் கூறும் மாற்றங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் இவரால் சுதந்திரமாக ட்விட்டரில் மாற்றங்களை செய்ய முடியததால் நிறுவனத்தை வாங்கி முடிவெடுத்துள்ளார். 

Also Read Elon Musk's Lifestyle: ஆடம்பரத்திலும் எளிமை..வேற லெவலில் வாழும் எலான் மஸ்க்...எப்போதும் பரபரப்பாக இருக்கும் மஸ்க்கின் கூலான லைஃப்..!

மஸ்க்கின் சதுரங்க ஆட்டம்:

இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு ஷேரை இந்திய மதிப்பில் ரூ.4120/-க்கு வாங்க முடிவு செய்துள்ளார். மொத்தமாக 100 சதவீத பங்குகளை வாங்க சுமார் 37 பில்லியன் தேவைப்படுகிறது. ஆனால் மஸ்க் பம்பர் ஆஃபராக 44 பில்லியன் கொடுத்துள்ளார். ஆனால் ஏற்க மறுத்த ட்விட்டர் அவர்களின் ஆட்டத்தை தொடங்கினர். மஸ்க்கை விட அதிக பங்குகளை வாங்க ட்விட்டர் போர்டு உறுப்பினர்கள் முடிவெடுத்தனர். எனவே, ட்விட்டர் நிறுவனம் புது பங்குகளை உருவாக்கி மற்ற பங்குதாரர்களுக்கு விற்பனை செய்தது. அவர்கள் அதனை குறைந்த விலைக்கு வாங்க முடியும், ஆனால் மஸ்க் வாங்க முடியாது. 

               

இப்படி செய்தால் அந்த பங்குகளின் மதிப்பு அதிகரிக்கும், மஸ்க்கின் பங்க மதிப்பு தானாக சரிய தொடங்கும். இந்த யுத்த விளையாட்டிற்கு கார்ப்ரேட் உலகில் பாய்சன் பில் என்று குறிப்பிடுவார்கள். இதற்கு மஸ்க் வைத்த வேட்டு என்னவென்றால், தனக்கு நெருக்கமாக இருக்கும் பங்குதாரர்களை அழைத்து ட்விட்டர் பாய்சன் பில்லை இறக்கினால் நீங்களும் அந்த பங்கை வாங்குங்கள். பின்பு நான் ட்விட்டரை வாங்க உதவுங்கள் என்று சமர்த்தியாங்க சகுனி ஆட்டம் ஆடியுள்ளார். 

Also ReadThings Elon Musk may Change in Twitter: மஸ்க்கின் அடுத்த பிளான்...ட்விட்டரில் வரப்போகும் மாற்றங்கள்...இது தானா?

லோன் மூலம் பைசல்:

பின்பு அவர்களுக்கு ரொக்கமாக 44 பில்லியன் டாலரை தருவதற்கு தன்னிடம் இருக்கும் 21 பில்லியன் டாலரை கொடுத்துள்ளார். பின்பு மீத முல்ல பணத்திற்கு டெஸ்லா பங்கு, ட்விட்டர் பங்கு மீது ஸ்டான்லி வங்கியிடம் லோன் உதவி கேட்டார். இப்பொழுது போர்டு உறுப்பினர்களுக்கு வேற வழி இல்லை, மார்க்கெட் ரேட்டை விட அதிக தொகை அளித்ததால் அவர்கள் ஏற்றே ஆக வேண்டும். 

               

எனவே, நேற்று சுமார் 10 மணி நேரம் நடந்த விறுவிறுப்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு, 44 பில்லியன் டாலர் கொடுத்து கைப்பற்றினார் எலான் மஸ்க். இப்ப தெரிகிறதா எப்படி பிளான் பண்ணி பால் போட்டு அவுட் ஆக்குனாருன்னு.   

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்