Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Netflix Reveals Exploding Kittens Game: நெட்ஃபிக்ஸ் அடுத்த சர்பிரைஸ்...Exploding Kittens கேம் சீரிஸ்...விரைவில் வெளியாகிறது!

Priyanka Hochumin April 20, 2022 & 22:50 [IST]
Netflix Reveals Exploding Kittens Game: நெட்ஃபிக்ஸ் அடுத்த சர்பிரைஸ்...Exploding Kittens கேம் சீரிஸ்...விரைவில் வெளியாகிறது!Representative Image.

Netflix Reveals Exploding Kittens Game: வெடிக்கும் பூனைகள் (Exploding Kittens) என்னும் கேம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் கிடைக்கிறது. இது வருகின்ற மே மாதத்தில் நெட்ஃபிக்ஸ் பயன்பாட்டில் தொடங்கப்பட உள்ளது. இதனுடைய டிவி சீரிஸ் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கேம் மற்றும் டிவி தொடர்களுக்கு தலைப்பை அடிப்படையாகக் கொண்ட வெடிக்கும் பூனைகள் (Exploding Kittens) தயாரிப்பாளர்களுடன் Netflix கைகோர்க்கிறது. வெடிக்கும் பூனைகள் விளையாட்டின் வெர்ஸன் ஏற்கனவே App Store மற்றும் Google Play இல் இருக்கிறது. இருப்பினும் Netflix இரண்டு புதிய exclusive cards-களை எக்ஸ்ப்ளோடிங் கிட்டன்களுக்குக் கொண்டு வருகிறது. அது என்னவென்றால், 

The Game: Radar - இது கார்டு டெக்கின் டாப்-புக்கு மிக அருகில் இருக்கும் வெடிக்கும் பூனைக்குட்டியின் நிலையை வீரர்களுக்கு வெளிப்படுத்துகிறது.

Flip Flop - இது டெக்கில் உள்ள கார்டுகளின் வரிசையை மாற்றியமைக்க உதவுகிறது. 

Netflix பயன்பாட்டில் வரப்போகும் வெடிக்கும் பூனைகள் எப்பொழுதும் இருக்கும் அதே கிளாசிக் கேம்ப்ளேவை கொண்டு தான் வரும் என்று திட்டவட்டமாக குறிப்பிடுகின்றனர். அதில் வெடிக்கும் பூனைக்குட்டியைத் தவிர்க்கும் நோக்கில் வீரர்கள் கார்டுகளை எடுக்க முற்படும் அதே விளையாட்டை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். தற்போது App Store மற்றும் Google Play-வில் கிடைக்கும் கேமின் வெர்ஸன், நெட்ஃபிக்ஸ் வெர்ஸன் தொடங்கப்பட்ட பிறகும் இருக்கும் என கூறப்படுகிறது.  

Also Read | பிளிப்கார்ட்டில் 50 இன்ச்...ஸ்மார்ட் டிவிகளுக்கு...இதுவரை இல்லாத அசத்தலான சலுகை!

Exploding Kittens TV series:

இப்பொழுது வரப்போகும் டிவி சீரிஸின் மேலோட்டமான கதையை பற்றி பார்ப்போம். வெடிக்கும் பூனைகள் தொலைக்காட்சித் தொடர் ஒரு வயது வந்தோருக்கான அனிமேஷன் நகைச்சுவை நிகழ்ச்சியாக இருக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது. அதில் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலான நித்திய மோதலால் கடவுள் மற்றும் பிசாசு இருவரும் பூமிக்கு chunky வீட்டு பூனைகளின் உடல் மூலம் பூமிக்கு அனுப்பப்படும் போது அதன் உச்சத்தை அடைகிறது என்று பொதுவான கதை சுருக்கத்தை தெரிவித்துள்ளனர். 

"நெட்ஃபிக்ஸ் மட்டும் தான் வெடிக்கும் பூனைக்குட்டியின் தொடர் மற்றும் விளையாட்டையும் உயிர்ப்பிக்க முடியும் ஒரே சேவையாகும்" என்று கூறுகிறார் இன்மேன். மேலும் அவர் " நாங்கள் உண்மையில் வார இறுதி திட்டமாக கிக்ஸ்டார்டரில் வெடிக்கும் பூனைகளை அறிமுகப்படுத்தினோம். ஆனால் எண்களின் கம்யூனிட்டி கடந்த ஆறு ஆண்டுகளாக நிறுவனத்தின் இதயமாகவும் ஆன்மாவாகவும் இருந்து வருகிறது. இந்த புதிய கேம் மற்றும் சீரிஸ் எங்கள் ரசிகர்களுக்கு, இணைவதற்கும் தொடர்பு கொள்வதற்கும் புதிய வழிகளை வழங்கும்" என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம் என்றார்.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்