Sun ,Jun 30, 2024

சென்செக்ஸ் 79,032.73
-210.45sensex(-0.27%)
நிஃப்டி24,010.60
-33.90sensex(-0.14%)
USD
81.57
Exclusive

Apple iphone to have USB-C Charging Port: இனி ஆண்ட்ராய்டு சார்ஜர்...ஆப்பிள் ஐபோனுக்கும் யூஸ் பண்ணலாமே!

Priyanka Hochumin June 08, 2022 & 12:00 [IST]
Apple iphone to have USB-C Charging Port: இனி ஆண்ட்ராய்டு சார்ஜர்...ஆப்பிள் ஐபோனுக்கும் யூஸ் பண்ணலாமே!Representative Image.

Apple iphone to have USB-C Charging Port: வரும் 2024 ஆம் ஆண்டு முதல் அணைத்து ஆப்பிள் சாதனத்தில் USB Type-C சார்ஜிங் போர்டுடன் வரப்போகிறது.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களுக்கு நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஆனால் இரண்டிலும் இருக்கும் பொதுவான ஒன்று சார்ஜர். என்ன தான் சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் மாறுபட்டிருந்தாலும், சார்ஜிங் என்பது பொதுவாக உள்ளது. இப்பொழுது வரும் ஐபோன் சாதனத்தில் சார்ஜர் புதிதாக வாங்க வேண்டியுள்ளது. இல்லை நீங்கள் இதற்கு முன்பு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் புதிதாக ஐபோன் வாங்கினால் அதற்கு தனியாக சார்ஜர் வாங்க உள்ளது. இந்த பிரச்சனை பயனர்கள் இடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான தீர்வு என்ன என்றால், இப்பொழுது ஆண்ட்ராய்டு போனில் USB Type-C சார்ஜர் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். அப்ப ஐபோனிலும் USB Type-C சார்ஜர் பொருந்தும் வகையில் தயாரித்து விட்டால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும். இது குறித்து பல வருடங்களாக பேச்சு வார்த்தை நடைபெற்று இப்பொழுது ஒரு தீர்வுக்கு வந்துள்ளது.

Whatsapp undo Update: வாட்ஸ்அப் பயனர்கள் எதிர்பார்க்கும் undo அப்டேட்...கூடிய விரைவில்! இனி ஜாலி தான்

ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு

அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு முதல் USB-C சார்ஜிங் வசதியுடன் ஐபோன்கள், ஆண்ட்ராய்டு என்று அனைத்து சாதனங்களும் பயன்பாட்டிற்கு வரும் என்று ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமல்லாது டிஜிட்டல் கேமராக்கள், டேப்லெட்டுகள் மற்றும் லேப்டாப்கள் என்று இனி தயாரிக்கும் அனைத்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றாய், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றமும் கவுன்சிலும் இந்த தகவலை இன்று அறிவித்துள்ளது. இது கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் நடந்த வாதத்திற்கு பிறகு உலகளாவிய USB-C சார்ஜிங்கிற்கான விதிமுறைகளை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

 

இந்த தீர்வு அங்கீகரிக்கப்பட்ட பிறகு, கையடக்க வீடியோ கேம் கன்சோல்கள், இ-ரீடர்கள், இயர்பட்ஸ், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஹெட்செட்களுக்கும் இந்த முடிவு பொருந்தும். மேலும் இன்றைய அறிவிப்பில் EU பாராளுமன்றம் தெரிவித்தது என்னவென்றால், 'உற்பத்தியாளரைப் பொருட்படுத்தாமல், ஒரு ஸ்மார்ட்போனுக்கு ஒயர் கேபிள் வழியாக ரீசார்ஜ் செய்யக்கூடியவற்றில் USB வகை-C போர்ட் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்' என்று கூறியுள்ளது.

EPFO Balance Verification: உங்க PF பேலன்ஸ் செக் பண்ண இத விட பெஸ்ட் ஆப்ஷன் எதும் இருக்காது!

மேலும் தற்போது லேப்டாப் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. பல USB-C சார்ஜிங் லேப்டாப்கள் அல்ட்ராலைட்களாக இருப்பதால், அவர்கள் பட்ஜெட்டிற்குள் இந்த முடிவு பொருந்துமா என்று தெரியவில்லை. இந்த கொள்கை அமலுக்கு வந்ததும், 40 மாதங்களுக்குள் லேப்டாப்களுக்கு USB-C சார்ஜிங் பொருத்தப்பட வேண்டும்.   

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்