Sat ,Oct 19, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Automatic Roti Making Machine in Tamil: ரொட்டி செய்ய 1.11 லட்சம்...கொடுத்து மெஷின் வாங்குறத்திற்கு...நானே செஞ்சிக்குவேன்!

Priyanka Hochumin May 02, 2022 & 16:30 [IST]
Automatic Roti Making Machine in Tamil: ரொட்டி செய்ய 1.11 லட்சம்...கொடுத்து மெஷின் வாங்குறத்திற்கு...நானே செஞ்சிக்குவேன்!Representative Image.

Automatic Roti Making Machine in Tamil: தொழில்நுட்பத்தில் புரட்சி வந்தாலும் தான் வந்துச்சு, என்னென்னத்தையோ கண்டுபிடிக்கிறாங்க. இதனால் மக்கள் நாளுக்கு நாள் சோம்பேறிகளாக மாறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மக்களால் பரவலாக பேசப்படும் விஷயம் Rotimatic மெஷின் தான். 

அது என்ன Rotimatic என்று நீங்க கேட்கலாம்? அது வேற ஒன்னும் இல்லைங்க. ரொட்டி அதாவது சப்பாத்தி செய்யும் இயந்திரம். ம்ம் இப்படியெல்லம் கண்டுபிடிச்சா என்னத்த சொல்றது. ஏற்கணமே விதவிதமா சமைக்கிறதுக்கு என்று நிறைய இயந்திரங்களை உருவாக்கியுள்ளனர். இப்பொழுது சப்பாத்தி செய்வதற்கும் இப்படி ஒரு இயந்திரம் கண்டுபிடித்தால், மக்கள் என்ன தான் சமைத்து சாப்பிடுவார்கள் சொல்லுங்க. 

ரொட்டி எப்படி செய்தார்கள் | Rotimatic Latest News

தேவையான அளவு கோதுமை மாவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைய வேண்டும். முழுதாக ஒன்று சேர்ந்ததும், பஞ்சு போல் ஆகும் வரை பிசைய வேண்டும். அதன் பின்பு என்னை ஊற்றி சப்பாத்தி மாவை ஊறவைத்து நன்கு மூடி வைக்கவேண்டும். அரை மணி நேரம் கழித்து அதை உருட்டி, தேய்த்து, கல்லில் போட்டு எடுக்க வேண்டும். இதை செய்ய எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். 

பரவாயில்லை நல்லா தான் இருக்கு? | Automatic Roti Making Machine in Tamil 

ஆனால் உங்களுக்கு இந்த சப்பாத்தி செய்யும் வேலை அதிகமாக தெரிகிறது, வேலை சுமையை குறைக்க விரும்பினால் இந்த இயந்திரத்தை வாங்கலாம். அப்படி இந்த மெஷின்ல என்ன தான் இருக்குன்னு பார்க்கலாம். நீங்க இந்த இயந்திரத்தை பயன்படுத்தி சப்பாத்தி செய்ய வேண்டுமென்றால் எதுமே செய்ய தேவையில்லை. வெறும் மாவை அதற்கு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றினால் மட்டும் போதும், அதுவே பதமாக மாவு பிசைந்துகொள்ளும். பின்பு அதுவே உருட்டி, தேய்த்து, சூடான ரொட்டியை உங்களுக்கு கொடுக்கும். இதற்கு வெறும் 5 நிமிடங்களே ஆகும். 

இதில் என்ன நன்மை? | Rotimatic Machine Price in India 

இது உங்களுடைய வேலையை குறைகிறது. ஆனால் இது உங்களுக்கு சத்தானதா? என்று நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும். அதேபோல் நாம் கையால் செய்யும் பொழுது கிடைக்கும் ருசியும் இதில் கிடைக்கிறதா? என்று பார்க்க வேண்டும். ஆக மொத்தத்தில் இவை இரண்டும் இதில் கிடைக்குமா? என்று கேட்டால் சற்று குறைவு தான். இதில் இருக்கும் ஒரே பிளஸ் நேரத்தை சேமிக்கிறது. ஆனால் மைனஸ் உடலுக்கு ஆரோக்கியம் இல்லை, சுவை ஏதோ மற்றும் பல. அடுத்து விலை, இந்த Rotimatic மெஷினின் விலை ரூ. 1,11,000/-க்கு இந்தியாவில் விற்பனையாகிறது. சுருக்க மாக சொல்ல வேண்டும் என்றால் இந்த மெஷின் ஒரு ஆள்-ரவுண்டர்.        

இதை பற்றி மக்கள் சோசியல் மீடியாவில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

  • ஒரு லட்சம் கொடுத்து இந்த மெஷின் வாங்குவதை விட, நான் நன்கு ரொட்டி செய்ய கற்றுக்கொள்வேன் என்றுள்ளார்.
  • உங்கள் மனைவியிடம் இருந்து விடுபட வேண்டுமா? நான் என்னுடைய மனைவியின் நகையை அடமானம் வித்து இந்த இயந்திரத்தை வாங்கினேன். இதை தெரிந்ததும் கோவித்து கொண்டு சென்றுவிட்டால், பின்பு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கால். மிக்க நன்றி Rotimatic... என்று கூறியுள்ளார்.
  • ஒரு வழியாக இந்தியாவில் இந்த இயந்திரம் விற்பனைக்கு வந்துவிட்டது. இந்தியா, விற்பனை சந்தைக்கு மிகவும் முக்கியமான நாடு. ஆனால் இப்படி ஒரு மெஷின் ரூ 1.11 லட்சம் என்று சொன்னால் கொஞ்சம் கஷ்டம். ஒரு ரூ. 25,000 - 40,000 வரை இருந்தால் நன்றாக இருக்கும், அதற்கு இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 
  • இந்த மெஷினை பற்றி நிறைய பேர் பதிவு செய்துள்ளார், ஆனால் இதை போல் இன்ஸ்டன்ட் ரொட்டி மேக்கர் ஏன் பெரிதளவு பேசப்படவில்லை? என்று தெரிவித்துள்ளார்.   

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்