Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 80,438.40
-568.21sensex(-0.70%)
நிஃப்டி24,586.25
-163.60sensex(-0.66%)
USD
81.57
Exclusive

Elon Musk – Twitter Deal Closed: மஸ்க்கின் தந்திரம்...சரியும் ட்விட்டர் பங்கு சதவீதம்...ட்விட்டர் CEO தெரிவித்த அதிரடி தகவல்!

Priyanka Hochumin May 14, 2022 & 13:00 [IST]
Elon Musk – Twitter Deal Closed: மஸ்க்கின் தந்திரம்...சரியும் ட்விட்டர் பங்கு சதவீதம்...ட்விட்டர் CEO தெரிவித்த அதிரடி தகவல்!Representative Image.

Elon Musk – Twitter Deal Closed: ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் இடையில் நடந்த மறைமுக போர் அனைவரும் அறிந்த ஒன்று. டெஸ்லா மற்றும் SpaceX-ன் தலைமை நிர்வாகி மஸ்க் எப்பொழுது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு முக்கிய புள்ளி. அதே போல் உலகின் டாப் பணக்காரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் ட்விட்டரை $44 பில்லியனுக்கு ( இந்தியா மதிப்பில் ரூ. 3,40,800/- கோடி) கைப்பற்றினார். அதில் நிறைய சிக்கல்கள், குளறுபடிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தையும் தாண்டி தனது சாமர்த்தியமான சதுரங்க ஆட்டத்தால் இறுதியில் கைப்பற்றினார் மஸ்க். இந்த சம்பவம் உலக மக்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. 

இப்படி இவர் ட்விட்டரை வாங்கிய சிறிது நாட்களில் குறிப்பிட்ட மாற்றங்களை கொண்டு வரப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மக்களும் இவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இப்படி சுமூகமாக போய் கொண்டிருந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் "மைக்ரோ-பிளாக்கிங் தளத்தின் 44 பில்லியன் டாலர் கையகப்படுத்தும் முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று எலோன் மஸ்க் அறிவித்தார். இந்த செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, இதுக்கா மனுஷன் இவ்ளோ போராடுனாரு என்று கருதினர்.  

ஒரு வேல டீல் கேன்சல் ஆச்சு...எலான் மஸ்க் ரூ.7665/- கோடி...fine கட்டணும்!

இதனை பற்றி ட்விட்டர் CEO பராக் அகர்வால் தெரிவிப்பது, எலான் மஸ்க்குடனான ஒப்பந்தம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நிறுவனத்தின் ஆரோகியமான ஆரோக்கியத்திற்காக முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்க இந்த ஒப்பந்தம் ஒரு காரணமாக இருக்காது, நிறுவனத்திற்கு சரியானதை எப்போதும் செய்வோம், மேலும் ட்விட்டர் அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். இதை பற்றிய முழு விளக்கம் இதோ!

Q&A செஷன்

ட்விட்டரில் மக்கள் தங்களின் கருத்துக்களை கேட்பதற்கும் பதிலளிக்கும் விதமாக ட்விட்டர் சிஇஓ கூறிய விளக்கங்கள். எப்படியும் ட்விட்டர் கையகப்படுத்தப்படும், பிறகு எதற்கு "நொண்டியான" தலைமை நிர்வாக அதிகாரி மாற்றங்களை செய்கிறார் என்று சிலர் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அகர்வாலின் பதில் ஒப்பந்தம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயத்தில் ட்விட்டர் எல்லா சூழ்நிலைகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக எது சரியோ அதை நாங்கள் செய்ய வேண்டும் என்று பதிலளித்தார்.  

ட்விட்டரை கைப்பற்ற...எலான் மஸ்க் ஆடிய...சதுரங்க ஆட்டம்!

மேலும் நேற்று எங்கள் தலைமைக் குழு மற்றும் செயல்பாடுகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளோம். இந்த ஒப்பந்தத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்காக எடுக்க வேண்டிய முடிவுகளை நான் மட்டும் அல்ல எந்த ட்விட்டர் தலைவரும் எடுக்காமல் இருக்க மாட்டார்கள். ட்விட்டரை வழிநடத்துவதும், இயக்குவதும் என்னுடைய பொறுப்பு. அதை மேற்க்கொண்டு ஒவ்வொரு நாளும் வலுவான ட்விட்டரை உருவாக்குவதே என்னுடைய மட்டும் தொழிலார்களின் ஒரே குறிக்கோள். நிறுவனத்தின் எதிர்கால உரிமையை யார் பெறுவார் என்பதைப் பொருட்படுத்தாமல், வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் அனைத்து பயனர்களுக்கான தயாரிப்பு மற்றும் வணிகமாக Twitter மேம்படுத்தப்படும் என்று அகர்வால் தொடர்ந்தார். 

மேலும் நிறுவனத்தில் வேலை செய்யும் யாரும் எங்களுடைய சுயநலத்திற்காக வேலை செய்ய வில்லை. எங்களுடைய வேலையை நாங்கள் கௌவரமாக பார்க்கிறோம். எனவே, நிறுவனத்தின் நன்மைக்காக ஒரு சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியது எங்களுடை கடமை என்றார். கூடுதலாக, எங்களுடைய பணியாளர்கள் நிலைகுலையாமல் தெளிவாக இன்னும் அவர்களின் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் மற்றும் நன்றி என்று தெரிவித்தார். 

மஸ்க்கின் அடுத்த பிளான்...ட்விட்டரில் வரப்போகும் மாற்றங்கள்...இது தானா?

இப்படி இவ்ளோ வேலைபாடுகள் நடந்து கொண்டிருக்க, வெள்ளிக்கிழமை அன்று ட்விட்டர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பதாக மஸ்க் போட்ட ட்வீட்டினால் வர்த்தகத்தில் ட்விட்டர் பங்குகள் சுமார் 20 சதவீதம் சரிந்தன. இதுவும் மஸ்க்கின் ஒரு ராஜா தந்திரமா? அல்லது இதற்கு பின்பு ஏதேனும் கரணங்கள் இருக்குமா? என்று தெரியவில்லை. 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்