Tue ,Jul 02, 2024

சென்செக்ஸ் 79,534.68
58.49sensex(0.07%)
நிஃப்டி24,151.85
9.90sensex(0.04%)
USD
81.57
Exclusive

EPFO Balance Verification: உங்க PF பேலன்ஸ் செக் பண்ண இத விட பெஸ்ட் ஆப்ஷன் எதும் இருக்காது!

Priyanka Hochumin June 07, 2022 & 17:40 [IST]
EPFO Balance Verification: உங்க PF பேலன்ஸ் செக் பண்ண இத விட பெஸ்ட் ஆப்ஷன் எதும் இருக்காது!Representative Image.

EPFO Balance Verification: நீங்கள் அரசு ஊழியர்களாக இருந்தால், மாதாமாதம் உங்களின் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை PF என்று பிடிக்கப்படும். உங்களுடைய பேலன்ஸ் எவ்ளோ இருக்கிறது என்று எப்படி தெரிந்துகொள்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

PF பேலன்ஸ் வெரிஃபிகேஷன் (PF Balance Verification)

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (The Employees Provident Fund Organization [EPFO]) என்பது மாத வருமானம் வாங்கும் ஊழியர்களின் சேமிப்பு கணக்காகும். இது ஊழியர்களுக்கு மட்டுமல்ல முதலாளிகளுக்கும் பொருத்தமான ஒன்று. இவர்களின் அடிப்படை வருமானத்தில் சுமார் 12% தொகை PF கணக்குகளுக்கு நிலையான பங்களிப்பாக வழங்கப்படுகிறது. இது இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் EPFO அமைப்பு, சேவை கணக்குகளுக்கான PF வட்டி விகிதத்தை அறிவித்து வருகிறது.

எனவே, நீங்கள் மாதாமாதம் செலுத்தும் பணத்தின் அளவு எவ்ளோ இருக்கும் என்பதை நீங்க பார்க்க வேண்டுமா? அதற்கு EPFO அமைப்பின் சந்தாதாரர்கள் தங்களது கணக்கு இருப்பை SMS, UMANG செயலி உள்ளிட்ட சில ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேவைகள் மூலம் சரிபார்க்கலாம்.

PF பேலன்ஸை SMS மூலம் சரிபார்ப்பது எப்படி?

இப்பொழுது நீங்கள் எஸ்எம்எஸ் மூலம் PF இருப்பை சரிபார்க்க விரும்பினால், முதலில் 7738299899 என்ற எண்ணிற்கு “EPFOHO UAN ENG” என SMS அனுப்பவும். பின்பு உங்களின் PF தொகை, கடைசி பங்களிப்பு மற்றும் மொத்த PF ஈர்ப்பு என்ற முழு விவரமும் SMS மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இதில் என்ன ஒரு சிக்கல் என்றால் EPF கணக்கில் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து வரும் எஸ்எம்எஸ் தகவலை மட்டுமே நம்ப வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் மற்ற நம்பர்களில் இருந்து வருவதை நம்பி உங்களின் பணத்தை இழந்து விடாதீர்கள்.

UMANG ஆப் மூலம் PF பேலன்ஸ் சரிபார்க்க என்ன செய்யணும்?

இதற்கு உங்களின் ஸ்மார்ட்போனில் play store அல்லது app store இல் இருந்து முதலில் UMANG ஆப்பை டவுன்லோட் செய்யவும். அதற்கு பின்பு அதில் கேட்கும் டேட்டாக்களை உள்ளிட்டு, உரிமைகோரல் நிலை (Claim Status) மற்றும் உங்கள் வாடிக்கையாளரின் நிலையை அறிந்துகொள்ளுதல் (KYC) போன்ற EPF தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

EPFO வெப்சைட் மூலம் PF பேலன்ஸ் எப்படி சரிபார்ப்பது?

முதலில் EPFO வெப்சைட்டில், பணியாளர் பிரிவுக்குச் சென்று, ‘உறுப்பினர் பாஸ்புக்’ என்பதைக் கிளிக் செய்யவும். அடுத்தது உங்களின் UAN மற்றும் பாஸ்வோர்டை பயன்படுத்தி உள்நுழையவும். இது முடிந்த பின்பு PF பாஸ்புக் மற்றும் வட்டி விவரங்கள் ஷ்கிரீனில் தோன்றும்.

மிஸ்டு கால் மூலம் PF பேலன்ஸ் சரிபார்க்க

நீங்கள் பதிசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து 011-22901406ஐ டயல் செய்து உங்களுக்கு வேண்டிய விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.  

EPFO Balance Verification, epf balance check, epf balance check sms, epf balance missed call, epf balance check online, epf balance uan number, epf balance check sms, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்