Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Facebook closes audio platforms : அய்யயோ.. பேஸ்புக் இழுத்துமூட முடிவு.. பயனர்கள் ஷாக்!!

Sekar May 04, 2022 & 11:52 [IST]
Facebook closes audio platforms : அய்யயோ.. பேஸ்புக் இழுத்துமூட முடிவு.. பயனர்கள் ஷாக்!!Representative Image.

Facebook closes audio platforms : வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகில், நிறுவனம் தனது ஆடியோ சேவைகளை மறு மதிப்பீடு செய்வதற்காக, அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குள் தனது போட்காஸ்ட் தளத்தை மூடுவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.

போட்காஸ்ட் மட்டுமல்லாது சவுண்ட்பைட்ஸ் மற்றும் ஆடியோ ஹப்ஸ் எனப்படும் குறுகிய வடிவ ஆடியோ சேவைகளையும் இழுத்து மூட பேஸ்புக் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஒரு வருடமாக இந்த சேவைகள் மூலம் தாங்கள் பெற்ற அனுபவங்களை மீண்டும் ஆய்வு செய்த பிறகு, பேஸ்புக்கில் எங்கள் ஆடியோ கருவிகளின் தொகுப்பை எளிதாக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பேஸ்புக் அதன் லைவ்-ஸ்ட்ரீமிங் லைவ் ஆடியோ ரூம்கள் அம்சத்தை அதன் பேஸ்புக் லைவ் தொகுப்பில் ஒருங்கிணைக்க உள்ளது.

போட்காஸ்டிங் மற்றும் ஆடியோ அம்சங்களில் களமிறங்கிய பிறகு, மெட்டாவுக்குச் சொந்தமான பேஸ்புக்  அதன் போட்காஸ்டிங் திட்டங்களில் ஆர்வத்தை இழந்து வருகிறது இதனால் அதன் போட்காஸ்ட் கூட்டாளர்களுடன் இணைந்து மற்ற முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறது.

அறிக்கைகளின்படி, பேஸ்புக் இப்போது போட்காஸ்ட் கூட்டாளர்களுடன் இணைந்து மெட்டாவர்ஸ் மற்றும் ஈ-காமர்ஸ் போன்றவற்றில் உள்ள மற்ற வாய்ப்புகளைத் தொடர கவனம் செலுத்துகிறது. ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மற்ற முயற்சிகளை விட குறுகிய வீடியோ திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறப்படுகிறது.

டிக்டாக் செயலியின் மூலம் உருவாகும் போட்டி காரணமாக ஷார்ட் வீடியோவில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஷார்ட் வீடியோவில் சிறப்பாக செயல்படுவது எவை மற்றும் எதை மேம்படுத்தலாம் என்பது குறித்து படைப்பாளர்களிடமிருந்து பேஸ்புக் இதற்காக கருத்துக்களைப் பெற்று வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்