Sat ,Oct 19, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Fitbit Irregular Heartbeat Rhythm alert: உங்களின் ஹார்ட் பீட்ல...கோளாறு இருந்தா Alert செய்யும்...புது ஸ்மார்ட் வாட்ச்!

Priyanka Hochumin April 26, 2022 & 14:10 [IST]
Fitbit Irregular Heartbeat Rhythm alert: உங்களின் ஹார்ட் பீட்ல...கோளாறு இருந்தா Alert செய்யும்...புது ஸ்மார்ட் வாட்ச்!Representative Image.

Fitbit Irregular Heartbeat Rhythm alert: ஃபிட்பிட் அதன் ஒன்பது தயாரிப்புகளுக்கு ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளது. 

மக்களின் அன்றாட அவசர வாழ்க்கையில் தங்களின் உடல் நலத்தை பற்றிய எண்ணத்தை சற்றே மறந்துவிட்டனர். எனவே, இவர்களின் உடலில் ஏற்படும் கோளாறுகளை கண்டறிய நிறைய கருவிகளை கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வரும் ஸ்மார்ட் வாட்ச்-களில் இதய துடிப்பு, SpO2, தூக்க நேரம், உடற்பயிற்சி போன்றவற்றை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் Fitbit ஸ்மார்ட் வாட்ச் அறிமுக படுத்தும் புதிய அம்சத்தை பற்றிய முழு விவரங்கள் இதோ. 

Also Read | Dizo Watch S Price in India: வெறும் ரூ.3000/-க்கு விற்பனையாக இருக்கும் புதிய ஸ்மார்ட் வாட்ச் இதோ!

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அறிவிப்புகள்:

இந்த மாத தொடக்கத்தில், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனை (atrial fibrillation [AFib]) கண்டறிய நிறுவனத்தின் ஃபோட்டோபிளெதிஸ்மோகிராஃபி (photoplethysmography [PPG]) அல்காரிதத்திற்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) Fitbit அனுமதி பெற்றது. இந்த புதிய அல்காரிதம் Fitbit wearables இல் புதிய அம்சத்தை இயக்க பயன்படுத்தப்படும். 

               

Fitbit Sense, Fitbit Versa 3 மற்றும் Fitbit Luxe ஆகியவை இந்த புதிய அம்சத்தை ஆதரிக்கும் ஸ்மார்ட்வாட்ச்களாகும். மேலும் இந்த அம்சம் 22 வயதிற்கு குறைவானவர்களுக்கு பயன்படுத்தப்படவில்லை என்று நிறுவனம் திட்டவட்டமாக கூடியுள்ளது. ஃபிட்பிட்டின் அணியும் பயனர்களின் இதயத்துடிப்பு பிரச்சனைகள் அதாவது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பற்றிய எச்சரிக்கையை உங்களுக்கு அளிக்கும். இது பயனர்கள் தூங்கிக் கொண்டிருந்தாலும் அல்லது அசையாமல் இருந்தாலும் கண்காணிக்கும் மேலும் AFib இன் சாத்தியமான அறிகுறிகளைத் தேடுகிறது. 

பயனர்கள் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அறிவிப்பைப் பெரும்பொழுது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற அறிகுறிகளையும் உங்களுக்கு வழங்கும். அதாவது, ஒரு சுகாதார வழங்குநரைக் கலந்தாலோசிக்க, உங்களின் மருந்துகளை மாற்றாதீர்கள் அல்லது இப்பொழுது பின்பற்றும் உணவு முறைகளை மாற்றி பாருங்கள் போன்ற குறிப்புகளை உங்களுக்கு வழங்கும். 

Also Read | New Oneplus Bud N TWS price in India: Oneplus ஸ்மார்ட்போனை...ஓரங்கட்டிய Oneplus இயர்பட்...மற்றும் நெக்பேண்ட் இயர்போன்ஸ்!

இதுவரை இந்த அம்சம் அமெரிக்காவில் மற்றும் Fitbit இன் ஒன்பது சாதனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அது Fitbit Sense, Fitbit Versa 2, Fitbit Versa 3, Fitbit Versa Lite, Fitbit Charge 3, Fitbit Charge 4, Fitbit Charge 5, Fitbit Luxe மற்றும் ஃபிட்பிட் இன்ஸ்பயர் 2 ஆகியவை ஆகும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்