Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,291.90
285.29sensex(0.35%)
நிஃப்டி24,855.10
105.25sensex(0.43%)
USD
81.57
Exclusive

Google New Update 2022: Google வெளியிடப்போகும்...இந்த ஆண்டின் லேட்டஸ்ட்...அப்டேட்ஸ் லிஸ்ட்!

Priyanka Hochumin May 13, 2022 & 13:00 [IST]
Google New Update 2022: Google வெளியிடப்போகும்...இந்த ஆண்டின் லேட்டஸ்ட்...அப்டேட்ஸ் லிஸ்ட்!Representative Image.

Google New Update 2022: நேற்று கூகுள் நிறுவனத்தில் நடைபெற்ற Google I/O event 2022 இல் இந்த வருடம் எந்தெந்த ஆப்-களுக்கு என்னென்ன அப்டேட்கள் வரும் என்ற முழுவிவரமும் குறிப்பிட்டுள்ளது. அதில் குறிப்பாக கூகுள் மேப், ஆண்ட்ராய்டு 13 பீட்டா 2, கூகுள் மீட், கூகுள் ஒர்க்ஸ்பேஸ், கூகுள் அசிஸ்டன்ட், யூடியூப் மற்றும் ஸ்கின் டோன் போன்ற ஆப்களின் அப்டேட்களை தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள். 

Google Maps அப்டேட் | Google New Update News

நமக்கு வழி காட்டும் கூகுள் மேப்பில், தற்போது உலகெங்கிலும் உள்ள கட்டிடங்கள் மற்றும் தெருக்களின் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் மாடலை வழங்க, கூகுள் மேப்ஸ் 'இம்மர்சிவ் வியூ' என்ற புதிய அனுபவத்தைப் பெறுகிறது. இந்த புதிய பயன்முறையானது கம்ப்யூட்டர் பார்வை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றால் மேம்பட்ட பார்வை அனுபவத்தை பயனர்களுக்கு வழங்க பயன்படுத்தப்படுகிறது. 

அதிவேக அனுபவத்திற்கு கூடுதலாக, இந்த நியூ வியூவில் பயனர்கள் எங்கு செல்ல வேண்டுமோ, அந்தப் பகுதி ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களிலும், பல்வேறு வானிலை நிலைகளில் எப்படி இருக்கும் என்பதை நேர ஸ்லைடரைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம். 'இம்மர்சிவ் வியூ' Google Cloud ஐப் பயன்படுத்தி பயனர்களுக்கு டிஜிட்டல் காட்சியை வழங்குகிறது. இந்த புதுவிதமான அனுபவம் லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ மற்றும் டோக்கியோவில் பயன்பாட்டில் உள்ளது. மேலும், புதிய ARCore Geospatial API மூலம் Google அதன் நேரடிக் காட்சியை டெவலப்பர்களுக்குக் கிடைக்கச் செய்கிறது. நீங்கள் ஏதேனும் உட்புறப் பகுதிகளுக்குச் செல்ல பயனர்களுக்கு உதவ, ரியல் வேல்டு வியூ-வின் மேல் அம்புகள் மற்றும் திசைகளைக் காண்பிக்க இது ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) ஐக் கொண்டுவருகிறது.

சுமார் 72 மணி நேரம்...பேட்டரி சேவர் மோடு...கொண்ட டாப் கிளாஸ் ஸ்மார்ட்போன்!

Android 13 beta 2 ரிலீஸ் | New Google Version Update 

கூகுள் நிறுவனத்தில் நடந்த Google I/O event 2022 இல், அடுத்து கூறப்பட்ட அப்டேட் ஆண்ட்ராய்டு 13 பீட்டா 2 ஆகும். கடந்த மாதம் ஒரு சில குறிப்பிட்ட பிக்சல் சாதனங்களுக்கு அறிமுகமான முதல் பீட்டா வெளியிடப்பட்டது. அதனுடைய மேம்பாடு மற்றும் அதன் பட்டியல்கள் இந்த அப்டேட்டில் இடம் பெற்று இருக்கும். 

மேலும் கூடுதலாக, ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் பிரைவசி செட்டிங்ஸ் பேஜ், ஆல்பத்தின் ஆர்ட்-வொர்க் கொண்ட நியூ மீடியா கன்ட்ரோல் மற்றும் பயனர்கள் அணுக விரும்பும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் புதிய போட்டோ பிக்சர் போன்ற அம்சங்கள் தெரிவிக்கப்பட்டது. 

இதில் ஆண்ட்ராய்டு 13 டேப்லெட்டுகளுக்கான மேம்படுத்தல்களும் இதனுள் அடங்கும். இதில் லேட்டஸ்ட் மல்டி டாஸ்கிங் திறன்கள், சிங்கிள் டேப்லெட் காட்சியை ஸ்ப்ளிட் ஷ்கிரீனாக மாற்றும் திறன் கொண்ட அப்டேடெட் டாஸ்க் பார் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கும்.    

இதுவரைக்கும் வந்ததுலையே காஸ்ட்லியான இயர்பட் இது தான்...! ஏன் இவ்ளோ விலை

Google Meet அப்டேட் | Google New Update News

கூகுள் மீட்டில் வரப்போகும் அடுக்கடுக்கான அப்டேட் பற்றிய முழு விவரங்கள் இதோ. இனி எல்லா வீடியோ காலும் HD குவாலிட்டில இருக்க போகிறது. 

1. நீங்கள் லைட் டிம்மாக இருக்கும் அறையில் இருந்தாலும், பழைய வெப்கேமைப் பயன்படுத்தினாலும் அல்லது மோசமான வைஃபை இணைப்பைப் பயன்படுத்தினாலும் வீடியோ குவாலிட்டியை மேம்படுத்த Google AI ஐப் பயன்படுத்தும் போர்ட்ரெய்ட் மீட்டமைப்பை (portrait restore) Google Meet பெறுகிறது. இந்த அம்சம் மூலம் வீடியோ தானாகவே மேம்படுத்த உதவும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. 

2. மேலே குறிப்பிட்ட அம்சத்துடன் சேர்த்து, வீடியோ பீட்டின் (video feed) போது ஸ்டூடியோ-குவாலிட்டி லைட்டிங்கை ஏற்படுத்த இயந்திர கற்றலைப் (machine learning) பயன்படுத்துவதாகக் கூறப்படும் போர்ட்ரெய்ட் ஒளியை Google Meet பெறுகிறது. இதன் மூலம் உங்களுக்கு வேண்டும் வகையில் லைட்டிங் நிலை மற்றும் பிரகாசத்தை சரி செய்து கொள்ளலாம். 

3. மெஷின் லேர்னிங்கைப் பயன்படுத்தி கடினமான பரப்புகளைக் கொண்ட ஸ்பேஸில் எக்கோவை பில்டர் செய்ய உதவும் கூகுள் மீட் டி-ரெவர்பரேஷனைப் பெறுகிறது. இந்த அம்சம் நீங்கள் பேஸ்மென்டில் இருந்தாலும், மைக்-எட்-அப் கான்ஃபரன்ஸ் அறையில் இருப்பது போல உணரவைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

4. கூடுதலாக, Google Meet நேரலைப் பகிர்வைப் பெறுகிறது. இதன் மூலம் விர்ச்சுவல் அழைப்பில் ஷேர் செய்யப்படும் கன்டென்டை சிங்க் செய்யவும், பங்கேற்பாளர்கள் மீடியாவைக் கட்டுப்படுத்தவும் இது பயன்படுகிறது. டெவலப்பர்களும் தங்கள் ஆப்ஸில் Meetஐ ஒருங்கிணைக்க நேரடி பகிர்வு APIகளைப் பயன்படுத்தலாம்.

கூடிய விரைவில் களமிறங்கும்...Google-ன் லேட்டஸ்ட் அல்ட்ரா லெஜெண்ட்...பிக்சல் வாட்ச்!

5. இந்த ஆண்டின் இறுதியில் ஆட்டோமேட்டட் டிரான்ஸ்கிரிப்ஷனையும், மீட்டில் உரையாடல்களை மேம்படுத்துவதற்காக அடுத்த ஆண்டு மீட்டிங் சுருக்கத்தையும் New Google Version Update கூகுள் கொண்டுவருவதாக குறிப்பிட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்