Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,291.90
285.29sensex(0.35%)
நிஃப்டி24,855.10
105.25sensex(0.43%)
USD
81.57
Exclusive

Google Pixel 6a Price in India: சுமார் 72 மணி நேரம்...பேட்டரி சேவர் மோடு...கொண்ட டாப் கிளாஸ் ஸ்மார்ட்போன்!

Priyanka Hochumin May 12, 2022 & 11:20 [IST]
Google Pixel 6a Price in India: சுமார் 72 மணி நேரம்...பேட்டரி சேவர் மோடு...கொண்ட டாப் கிளாஸ் ஸ்மார்ட்போன்! Representative Image.

Google Pixel 6a Price in India: நேற்று கூகுள் நிறுவனத்தில் நடைபெற்ற google i/o event 2022 வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் Google Pixel 6a அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்தின் இன்-ஹவுஸ் டென்சர் செயலி மற்றும் 6ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட Titan M2 பாதுகாப்பு கோப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.  

24 மணிநேர பேட்டரி ஆயுளைக் கொண்ட நவீன ஸ்மார்ட்போன் இது. மேலும் 72 மணிநேர பேக்அப் உள்ளடக்கிய தீவிர பேட்டரி சேவர் மோடையும் வழங்குவதாகக் கூறப்படுகிறது. பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோவை விட இது மிகவும் மலிவான மாடலாக தான் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பிக்சல் 6ஏ மாடல் குறைந்தது ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்களைப் பெரும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதுவரைக்கும் வந்ததுலையே காஸ்டிலியான இயர்பட் இது தான்...! ஏன் இவ்ளோ விலை

கூடுதலாக, இந்த ஆண்டின் இறுதியில் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கூகுளின் அடுத்த தலைமுறை டென்சர் SoC, அலுமினிய கேமரா தொகுதி மற்றும் ஆண்ட்ராய்டு 13 உடன் வடிவமைப்பைக் கொண்டு வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது. 

Google Pixel 6a அம்சங்கள் | Google Pixel 6a Specifications

ஷ்கிரீன்

6.1-inch full-HD + OLED டிஸ்பிலே

டிஸ்பிலே

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பை கொண்டுள்ளது.

Refresh Rate

60 Hz

Resolution

1080 x 2400 pixels

பிராஸசர்

octa-core Google Tensor SoC மற்றும் Titan M2 பாதுகாப்பு கோப்ராசசர் 

RAM & ஸ்டோரேஜ்

6 GB + 128 GB

பின் கேமரா

12.2 MP பிரைமரி சென்சார் + 12 MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவுடன் கூடிய செகண்டரி சென்சார்.

முன் கேமரா

8 MP

பேட்டரி 

4410mAh

விலை

ரூ. 34,800/-

 

கேமரா தான் டாப் குவாலிட்டி, பின்புற கேமரா 30fps இல் 4K வீடியோ பதிவு மற்றும் முன் கேமரா 30fps இல் 1080p வீடியோ பதிவு ஆதரவையும் வழங்குகிறது. இதில் 5G, 4G LTE, Wi-Fi 6E, புளூடூத் 5.2 மற்றும் USB டைப்-சி போர்ட் போன்ற இணைப்பு விருப்பங்கள் அடங்கியுள்ளன. இதனின் போர்டு சென்சாரில் accelerometer, ambient light, barometer, gyroscope, magnetometer மற்றும் proximity sensor உள்ளடங்கும். மேலும் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் Chalk, Charcoal மற்றும் Sage ஆகிய வண்ணங்களில், ஜூலை 21 ஆம் தேதி அமெரிக்காவில் முன்கூட்டிய ஆர்டரில் விற்பனைக்கு வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியல்மியில் வரப்போகும்...ஹை டெக் லோ பட்ஜெட் ஸ்மார்ட்போன்...அதுவும் இவ்ளோ தானா!

இந்தியா மற்றும் மற்ற சந்தைகளில் எப்பொழுது இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்ற தகவலை இன்னும் கூகுள் வெளியிட விலை. ஆனால் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனையாகும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

பிக்சல் 7 சீரிஸ், பிக்சல் டேப்லெட் டீஸ் செய்யப்பட்டது | Google Pixel 7 Tablet

நேற்று நடந்த google i/o event 2022 இல் நிறுவனம் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோவை டீஸ் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் கூகுளின் அடுத்த தலைமுறை டென்சர் SoC மூலம் இயக்கப்படும் மற்றும் ஆண்ட்ராய்டு 13 அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்கும் என்று தெரிவித்துள்ளது.  தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ மாடல்கள் கண்ணாடிகளை பயன்படுத்தினர். ஆனால் இது அதற்கு பதிலாக அலுமினியத்தால் செய்யப்பட்ட பார் வடிவ பின்புற கேமரா அமைப்பைக் கொண்டதாக தெரிவித்துள்ளது. போட்டோ மற்றும் வீடியோக்களுக்கு, பிக்சல் 7 டூயல் கேமரா அமைப்பையும், பிக்சல் 7 ப்ரோ ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பையும் கொண்டிருக்கும்.

கூகுள் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோவுடன், ஆண்ட்ராய்டு இயங்கும் டேப்லெட்டில் வேலை செய்வதாகவும் அவை 2023 இல் அறிமுகபப்டுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  டேப்லெட் டென்சர் SoC மூலம் இயக்கப்படும் என்று கூகுளின் சாதனங்கள் மற்றும் சேவைகளின் மூத்த துணைத் தலைவர் ரிக் ஆஸ்டர்லோ தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்