Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,291.90
285.29sensex(0.35%)
நிஃப்டி24,855.10
105.25sensex(0.43%)
USD
81.57
Exclusive

Google Pixel Buds Pro: இதுவரைக்கும் வந்ததுலையே காஸ்ட்லியான இயர்பட் இது தான்...! ஏன் இவ்ளோ விலை

Priyanka Hochumin May 12, 2022 & 10:10 [IST]
Google Pixel Buds Pro: இதுவரைக்கும் வந்ததுலையே காஸ்ட்லியான இயர்பட் இது தான்...! ஏன் இவ்ளோ விலைRepresentative Image.

Google Pixel Buds Pro: கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சல்லேஷன் (ANC) உடன் வருகிறது. இது புதிய சைலண்ட் சீல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் ஆடியோ கசிவை ஈடுசெய்யவும், ரத்துசெய்யப்பட்ட சத்தத்தின் அளவை அதிகரிக்கவும் பயன்படுகிறது. 

கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ விவரக்குறிப்புகள் | Gogle Pixel Buds Pro Specifications

சமீபத்தில் பயன்பாட்டில் இருக்கும் பிக்சல் பட்ஸ் மற்றும் பிக்சல் பட்ஸ் ஏ-சீரிஸ் இரண்டிலும் ANC ஆதரவு இல்லை. எனவே, இந்த புதிய இயர்பட் சற்று மேம்படுத்தப்பட்டதாக தெரிவிக்கிறது கூகுள். பிக்சல் பட்ஸ் ப்ரோவில் வெளிப்படைத்தன்மை மோடு (transparency mode) இருப்பதால் பயனர்கள் இதை பயன்படுத்தும் போதும் சுற்றுப்புற ஒலியைக் கேட்க முடியும். இந்த ஆண்டின் இறுதியில் ஸ்பேஷியல் ஆடியோ ஆதரவுடன் பிக்சல் பட்ஸ் ப்ரோவை அப்டேட் செய்ய கூகுள் முடிவு செய்ததாக தெரிவித்துள்ளது. இதில் இருக்கும் ANC-ஐ பற்றி தெளிவாக விவரிக்க வேண்டும் என்றால், இயர்பட்கள் காற்று மற்றும் பிற பின்னணி இரைச்சலை தவிர்க்க, இயந்திர கற்றல் (machine learning) மூலம் பயிற்சியளிக்கப்பட்ட  noise suppression அல்காரிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த அல்காரிதத்தை பயன்படுத்தும் பீம் உருவாக்கும் மைக்ரோஃபோன்களைக் கொண்டு செல்வதாக கூகுள் கூறியது. 

கூடிய விரைவில் களமிறங்கும்...Google-ன் லேட்டஸ்ட் அல்ட்ரா லெஜெண்ட்...பிக்சல் வாட்ச்!

இதில் இருக்கும் இயர்பட்கள் தனிப்பயன் ஆடியோ சிப் மூலம் இயக்கப்படுகின்றன. இது ஹார்டுவேரை 11 மணிநேரம் பயன்படுத்த அனுமதிக்கும் அல்லது ANC இயக்கப்பட்ட ஏழு மணிநேரம் வரை நீடிக்கும் வகையில் ஆற்றல் செயல்திறன் கொண்டுள்ளது என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. இப்பொழுது பயன்பாட்டில் இருக்கும் பிக்சல் பட்ஸ் அல்லது பிற பிற பிக்சல் சாதனங்களைப் போல், பிக்சல் பட்ஸ் ப்ரோவும் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ கூகுள் அசிஸ்டண்ட் அனுபவத்துடன் வருகிறது. இதன் மூலம் மொபைலின் உதவி இல்லாமல் கூகுள் அசிஸ்டண்ட்டிடம் வழி கேட்கலாம், சுமார் 40 மொழிகளில் மொழிபெயர்க்கலாம், போன் பேசலாம் இப்படி அனைத்தையும் செய்யலாம். 

Google pixel buds pro review இயர்பட்களை ஒரு சார்ஜிங் கேஸுடன் தொகுத்துள்ளது. நீங்கள் சார்ஜ் செய்ய வயர்டு சார்ஜிங் மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான USB வகை-C இதில் இடம்பெற்றுள்ளது. இந்த இயர்பட்டை பயனர்கள் "ஃபோன்கள், டேப்லெட்டு, லேப்டாப் மற்றும் டிவி" ஆகியவற்றுடன் ஒரே நேரத்தில் இணைக்க முடியும். மேலும் நீங்கள் பயணத்தில் இருக்கும் பொழுது ஆடியோ ஸ்ட்ரீம்களுக்கு இடையில் மாறுவதற்கான மல்டிபாயிண்ட் இணைப்பு ஆதஹ்ராவும் இருக்கிறது. ஒரு வேலை உங்களின் இயர்பட் தொலைந்தாலோ அல்லது வைத்துள்ள இடத்தை மறந்துவிட்டாலோ ஃபைண்ட் மை டிவைஸைப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் பிக்சல் பட்ஸ் புரோவைக் கண்டறிய முடியும்.    

இந்த வருஷம்...Google-ல இந்த அப்டேட்-லாம்...வரப்போகிறதாம்!

பிக்சல் பட்ஸ் ப்ரோவை நீங்கள் புளூடூத் v5.0 மூலம் மற்ற சாதனங்களுடன் இணைத்துக்கொள்ளலாம். இதை நீங்க ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்கள் அல்லது டேப்லெட், லேப்டாப் போன்றவை போல் எல்லா புளூடூத் v4.0+ சாதனத்துடனும் இயர்பட்களை இணைக்க முடியும். இந்த இயர்பட் ரூ. 15,400/- விலைக்கு விற்பனையாகும் என்று கூறியது. Charcoal, Coral, Fog மற்றும் Lemongrass ஆகிய நான்கு வண்ணங்களில் வருகிறது. மேலும் (google pixel buds pro pre order) ஜூலை 21 முதல் அமெரிக்காவில் முன்கூட்டிய ஆர்டர் செய்யலாம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் எப்பொழுது (google pixel buds pro release date) விற்பனைக்கு வரும் என்ற தகவல் வெளியாகவில்லை.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்