Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,291.90
285.29sensex(0.35%)
நிஃப்டி24,855.10
105.25sensex(0.43%)
USD
81.57
Exclusive

Google Pixel Watch 2022: கூடிய விரைவில் களமிறங்கும்...Google-ன் லேட்டஸ்ட் அல்ட்ரா லெஜெண்ட்...பிக்சல் வாட்ச்!

Priyanka Hochumin May 12, 2022 & 08:10 [IST]
Google Pixel Watch 2022: கூடிய விரைவில் களமிறங்கும்...Google-ன் லேட்டஸ்ட் அல்ட்ரா லெஜெண்ட்...பிக்சல் வாட்ச்!Representative Image.

Google Pixel Watch 2022: நேற்று நடந்த Google I/O Event 2022 நுகர்வோர் உரையின் பொழுது, நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்சான கூகுள் பிக்சல் வாட்ச் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்சுடன், கூகுளின் லேட்டஸ்ட் Truly Wireless Stereo (TWS) இயர்பட்டான கூகிள் பிக்சல் பட்ஸ் ப்ரோ வெளியாக உள்ளது. இது ஆப்பிளின் ஏர்போட்ஸ் ப்ரோ மற்றும் சாம்சங்கின் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ போன்ற இயர்பட்களுக்கு சவால் விடுக்கும் வகையில் வரப்போகிறதாம்.

கூகுள் பிக்சல் வாட்ச் விவரக்குறிப்புகள் | Google Pixel Watch Features

கூகுளின் பிக்சல் வாட்ச் (Google Pixel Watch) லேட்டஸ்ட் Wear OS மூலம் இயங்குகிறது. இது வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் வட்டவடிவக் காட்சியைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆப்பிள் வாட்சின் டிஜிட்டல் கிரீடத்தைப் போன்றது மற்றும் துருப்பிடிக்காத ஸ்டீல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. பிக்சல் வாட்ச் தனிப்பயனாக்கக்கூடிய, மாற்றக்கூடிய ரிஸ்ட் பேண்டுகளுடன் வருவதால் நீங்கள் அதை தடையின்றி இணைக்க முடியும். இருப்பினும் இந்த வாட்ச் வழக்கமான 22 மிமீ ஸ்ட்ராப்களை ஆதரிப்பதாகத் தெரியவில்லை. இவர் கூகுள் பிக்சல் வாட்ச் தோற்றத்தின் குறிப்புக்கள். இப்பொழுது அதன் சாப்ட்வேர் பற்றிய தகவல்களை பார்க்கலாம். 

இந்த வருஷம்...Google-ல இந்த அப்டேட்-லாம்...வரப்போகிறதாம்!

Google Pixel Watch அதிக திரவ வழிசெலுத்தல் (fluid navigation) மற்றும் ஸ்மார்ட் அறிவிப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட Wear OS UI -ஐ இயக்குகிறது. மற்ற Wear OS ஸ்மார்ட் வாட்ச்களை விட கூகுள் தன்னுடைய சாதனத்தில் தனித்துவமான அனுபவத்தை வழங்குவது குறிப்பிடத்தக்கது. இந்த பிக்சல் வாட்சில் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் வாலட் உள்ளிட்ட கூகுளின் சலுகைகள் முழுமையாக ருங்கிணைக்கப்பட்டு மேம்பட்ட அனுபவத்தை வழங்குகிறது. Wear OSக்கான ஹோம் பயன்பாட்டைப் பயன்படுத்தி ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை கன்ட்ரோல் செய்யும் ரிமோட்டான Pixel Watch-Google உருவாக்கியுள்ளது. இதை நீங்கள் அணிவது மூலம், நேரடியாக உங்கள் வீட்டில் இருக்கும் லைட் அல்லது பேன் போன்றவற்றை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம். மேலும் " தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி அனுபவங்களை" பயனர்களுக்கு வழங்குவதற்காக கூகிள் தனது பிக்சல் வாட்சில் ஃபிட்பிட்டை கூடுதலாக ஒருங்கிணைத்துள்ளது. இது 24 மணி நேரமும் உங்களின் இதயத் துடிப்பு மற்றும் தூக்க கண்காணிப்பை வழங்குகிறது. மேலும் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் பொழுது உங்கள் பகுதியின் ஆக்ட்டிவ் சோன் மினிட்ஸை பார்க்கலாம், புள்ளிவிவரங்களைக் கண்காணிக்கலாம் மற்றும் வெவ்வேறு உடற்பயிற்சி இலக்குகளை மேற்கொள்ளலாம். பிக்சல் வாட்ச் ஃபைண்ட் மை டிவைஸ் ஆப்ஸுடன் இணைந்துள்ளது. எனவே, நீங்கள் பிக்சல் ஃபோன், இயர்பட்கள் அல்லது வேறு ஏதேனும் ஆதரிக்கப்படும் சாதனங்களைத் தவற விட்டால் அல்லது மறந்துவிட்டால், மேப் மூலம் எளிமையக கண்டுபிடிக்க முடியும். 

இந்த ஸ்மார்ட் வாட்சின் விலை (Google Pixel Watch Price) இன்னும் வெளியாகவில்லை, ஆனால் கூடிய விரைவில் அமெரிக்காவில் விற்பனைக்கு (Google Pixel Watch Release Date) வரும் என்று கூகிள் தெரிவித்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்