Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Google Play System Update May 2022: இனிமே எதை ஷேர் பண்ணாலும்...approve செய்ய தேவையில்லை...! Google Play System அப்டேட்...!

Priyanka Hochumin May 05, 2022 & 09:00 [IST]
Google Play System Update May 2022: இனிமே எதை ஷேர் பண்ணாலும்...approve செய்ய தேவையில்லை...! Google Play System அப்டேட்...!Representative Image.

Google Play System Update May 2022: Google Play சிஸ்டத்தின் மே மாதத்திற்கான அப்டேட் வெளியிடப்பட்டுள்ளன. Google help பயன்பாட்டின் ரீடிசைன் தவிர, சுய-பகிர்வில் (அதாவது self-sharing) அருகிலுள்ள பகிர்வு அம்சத்தை (Nearby Share feature) சேர்ப்பதும் அப்டேட்களில் ஒன்றாகும். 

இது எந்த மாறி அப்டேட் 

இந்த கூகுள் சிஸ்டம் அப்டேட்டில் ஆண்ட்ராய்டு OS, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே சர்வீசஸ் போன்றவை அடங்கும். ஒவ்வொரு மாதமும், ஆண்ட்ராய்டுக்கான "கூகுள் சிஸ்டம்" என்று கூறப்படும் சிஸ்டம் அப்டேட்டில் என்னென்ன மாற்றங்கள் செய்துள்ளது குறித்து லேட்டஸ்ட் அப்டேட்களை கூகுள் தெரிவித்து வருகிறது. எப்பொழுதும் changelog ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரியாகத் தெரியும், ஆனால் இந்த முறை சில மாற்றங்களையும் மேம்பாடுகளையும் பட்டியலிடப்பட்டுள்ளது. 

9to5Google இன் அறிக்கையின்படி, சமீபத்திய Google Play மே 2022 அப்டேட், Apple சாதனங்களில் AirDrop உபயோகிக்கும் அனுபவத்தை வழங்குவது போல, Google Nearby Shareக்கு சுய-பகிர்வைக் கொண்டுவந்துள்ளது. Chromebook மற்றும் Windows PCகளுடன் Nearby Share இணக்கமானது.  

இன்று முதல் விற்பனை…வெறும் ரூ.14,999/-க்கு…iQoo ஸ்மார்ட்போன்! ஸ்பெஷல் டிஸ்கவுண்ட்…

இந்த அப்டேட் என்ன செய்யும்?

இந்த புது அப்டேட் மூலம், பயனர்கள் தாங்கள் ஷேர் செய்யும் ஒவ்வொரு பைல்-களையும் approve செய்ய தேவையில்லை. எனவே, அவர்கள் பைல், லிங்க் மற்றும் டெக்ஸ்ட் போன்றவற்றை தங்களின் ஒரு சாதனத்தில் இருந்து மற்றொன்றுக்கு அனுப்ப முடியும் என்று தெரிவித்துள்ளனர். Nearby Share இல் உள்ள சுய-பகிர்வு விருப்பம் முதலில் ஜனவரியில் கண்டறியப்பட்டது, அதன் பிறகு கடந்த மாதம் வளர்ச்சியில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த அப்டேட் பெற என்ன செய்ய வேண்டும்?

உங்களின் ஆண்ட்ராய்டு சாதனத்தில் சமீபத்திய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளைப் பெற, பயனர்கள் Google Play Services வெர்சன் 22.15 மற்றும் Play Store வெர்சன் 30.3-ஐ அப்டேட் செய்ய வேண்டும். கடந்த மே 2 ஆம் தேதி முதல் இந்த இரண்டு வெர்சனில் வெளிவர தொடங்கியுள்ளது. 

மேலும் பயனர்களுக்கு அப்டேட் கிடைத்தால், அவர்கள் Google Play சர்வீசஸ்சை அப்டேட் செய்ய Google Playக்குச் செல்லலாம். அதே போல் கூகுள் ப்ளே சிஸ்டம் அப்டேட்டை செட்டிங்ஸ் ஆப்ஸ் மூலமாகவும் பெறலாம். அதற்கு முதலில்  Settings app > About phone > Android version > Google Play system update என்று செய்துகொள்ளலாம். 

வாட்ஸ்அப்பில் வெளியான புதிய அப்டேட்...இதில் இருக்கும் சிறப்பு என்ன தெரியுமா?

மேலும், புதிய கூகுள் ப்ளே சிஸ்டம் அப்டேட், கூகுள் ஹெல்ப் பயன்பாட்டிற்கு ரீடிசைன் கொண்டுவருகிறது. இந்த வடிவமைப்பு மாற்றம் தொடர்பான எந்த குறிப்பிட்ட விவரங்களையும் சேஞ்ச்லாக் குறிப்பிடவில்லை. இருப்பினும் Google அதன் "மெட்டீரியல் யூ" வடிவமைப்பு தீம்மை இந்த பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்