Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Guide for New Smartphone Buyers: வாங்கியாச்சு புது ஸ்மார்ட்போன்...அடுத்து என்ன பண்ணனும்னு குழப்பமா? செய்ய வேண்டிய விஷயங்கள்!

Priyanka Hochumin April 21, 2022 & 21:10 [IST]
Guide for New Smartphone Buyers: வாங்கியாச்சு புது ஸ்மார்ட்போன்...அடுத்து என்ன பண்ணனும்னு குழப்பமா? செய்ய வேண்டிய விஷயங்கள்!Representative Image.

Guide for New Smartphone Buyers: உங்களின் பழைய போன் உடைந்து விட்டதா? அல்லது சலித்து போய்விட்டதா? சரி ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்கலாம் என்று தோன்றுகிறதா? அப்ப உடனே ஆர்டர் பண்ணி ஸ்மார்ட்போன் வாங்கியாச்சு. இப்ப அடுத்து முக்கியமா என்ன பண்ணனும்னு தெரிலையா? இதோ உங்களுக்கான பதிவு!

இப்ப இருக்குற காலத்தில சிறுசுங்க முதல் பெருசுங்க வரை ஸ்மார்ட்போன் இல்லாம இருக்க முடியாது. இது வந்ததுல இருந்து உணவு போச்சு, தூக்கம் போச்சு, விளையாட்டு போச்சு, உடல்நலம் போச்சு மற்றும் உறவுகளும் போச்சு. எது போனாலும் என்ன இது அத்தியாவசியமாக மாறிவிட்டதே என்ன பண்றது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வரும் அவர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ற ஸ்மார்ட்போன்களை வாங்கி மகிழ்ச்சியடைவார்கள். அது 10,000 ரூபாய் போனாக இருந்தாலும் சரி 1 லட்சம் ரூபாய் போனாக இருந்தாலும் சரி எல்லாம் ஒன்னு தான். 

இன்சூரன்ஸ் 

ஸ்மார்ட்போன் மட்டுமல்லாமல் எந்த ஒரு கேட்ஜெட்ஸ் வாங்குனாலும் முதலில் செய்ய வேண்டியது இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. ஒரு வேலை உங்களின் போன் தொலைந்து போச்சு அல்லது காய் தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது என்றால் அது உங்களுக்கு உபயோகரமாக இருக்கும். தற்போது ஸ்மார்ட்போன்களுக்கு என்று காப்பீடு வழங்கும் நிறைய நிறுவனங்கள் மார்க்கெட்டில் அதிகரித்து வருகிறது, அவை மூலம் நீங்கள் உதவி பெறலாம்.

அடுத்தது சார்ஜ் 

ஆர்டர் பண்ண ஸ்மார்ட்போன் டெலிவரி ஆன பிறகு சந்தோசத்தில் உடனே அதில் என்னென்ன இருக்கு என்று பார்க்காமல் சார்ஜ் போடுங்கள். அதுவும் போனை ஆஃப் பண்ணிட்டு சார்ஜ் போட வேண்டும்.இது உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியின் ஆயுளை நீடிக்க உதவும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். சுமார் 8 மணி நேரம் சார்ஜ் ஆன பிறகு போனை ஆன் செய்து பயன்படுத்துங்கள்.

Also Readஜியோ அல்டிமேட் ஆஃபர்...200 ரூபாய் போதும்...14 ஓடிடி பிளாட்பார்ம் ஆக்சஸ் உறுதி!

டெம்பெர்டு கிளாஸ் 

அடுத்தது மிகவும் முக்கியமான ஒன்று டெம்பெர்டு கிளாஸ் ஷ்கிரீன் மேல் போடுவது தான். இது அழகாக இருக்கும் உங்கள் ஸ்மார்ட்போனை அதே அழகுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் பாக்கெட், பர்ஸ் ஆகிவற்றில் வைத்துள்ள போது ஸ்க்ராட்ச் ஆகாமல் இருக்க பயன்படும். ஒரு 100 - 200 ரூபாய் ஆகும் எனவே சலிக்காமல் முதலில் போன் வாங்கியது இதனை செய்துவிடுங்கள்.

பேக் கேஸ் 

போனே கொஞ்சம் காஸ்டிலியா வாங்கிட்டோம் பேக் கேஸ் கொஞ்ச நாள் கழிச்சு வாங்கிக்கலாம் என்ற மெத்தனத்தில் இருக்காதீர்கள். இது தான் ரொம்ப முக்கியம். ஏனென்றால் புது போன் உங்கள் பழக்கத்தில் வருவதற்கு சிறிது காலம் ஆகும். அதுவரை உங்களின் நினைவில் அது இருக்காது, அந்த சமயத்தில் கீழே எங்கையாவது விழுந்து விட்டால் அவ்ளோ தான் காலி. எல்லா ஸ்மார்ட்போன்களிலும் மெட்டல் வடிவமைப்பு இருக்காது, விழுந்தால் சுக்கு நூறாக உடைந்து விடும். ஆகவே, பேக் கேஸ் வாங்கி போட்டுக்கொள்ளுங்கள். 

பேக் அப் 

பழைய ஸ்மார்ட்போனில் இருக்கும் உங்களுக்கு தேவையான முக்கிய ஆவணங்களை முதலில் பேக் அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள். அதற்கு உங்களின் ஈமெயில் ஐடி பயன்படுத்தி சிங்க் செய்து கொண்டால் வேலை சுலபமான முடிந்து விடும். அதற்கு பின்பு அந்த புதிய ஸ்மார்ட்போனை உங்களின் ஸ்டைலுக்கேற்ப மாற்றி வைத்துக்கொண்டு ஆனந்தமாக உபயோகியுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்