Fri ,Jun 28, 2024

சென்செக்ஸ் 79,243.18
568.93sensex(0.72%)
நிஃப்டி24,044.50
175.70sensex(0.74%)
USD
81.57
Exclusive

Low Cost Internet Facilities: குறைந்த கட்டணத்தில் இணைய வசதி….! தமிழக அரசின் மாஸான பிளேன்….!

Gowthami Subramani June 09, 2022 & 10:55 [IST]
Low Cost Internet Facilities: குறைந்த கட்டணத்தில் இணைய வசதி….! தமிழக அரசின் மாஸான பிளேன்….!Representative Image.

Low Cost Internet Facilities: குறைந்த விலையில் இணையதள வசதியை அளிப்பதற்கான திட்டம் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட இந்த சிறப்பான திட்டம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழக தகவல் தொழில்நுட்பம்

நாகர்கோயிலில், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சராக விளங்கும் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து இந்தத் திட்டம் பற்றி எடுத்துரைத்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டே, தமிழகத்தில் 12,525 ஊராட்சிகளில் இணைய வசதி ஏற்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதிமுக-வின் செயலால், இந்தத் திட்டம் நிறைவேற்றப்படாதோடு இது குறித்த வழக்குகள் எழுந்தன (TN Govt Internet Scheme).

நிலுவை வழக்குகள்

இந்த சூழ்நிலையில், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத இந்த இரண்டு வழக்குகளும் நிலுவையில் இருந்தன. தற்போது, இந்த இரன்டு வழக்குகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான திட்டம் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இதற்கான ஒப்பந்தமும் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது. இதற்கான சர்வே பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை அடுத்து, இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால், திட்டம் தொடங்கப்பட உள்ளது.

தமிழக அரசின் அமோக திட்டம்

இந்தத் திட்டத்தின் படி, வரக்கூடிய 10 மாதங்களுக்குள் தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும், இணைய வசதி முழுமையாகக் கிடைக்கப்பெறும் வகையில், இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது (TN Govt Internet).

மேலும், ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு அறை ஏற்படுத்தப்படும் எனவும், அந்த அறையைச் சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இணைய வசதியைப் பயன்படுத்தப்படும் வகையில் அமையப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், இத்திட்டம் அரசால் நிறுவப்படுவதன் காரணமாகக் குறைந்த அளவிலேயே கட்டணம் அமையப் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் வரவேற்பு

தொடர்ந்து பல்வேறு நெட்வொர்க்குகளின் இணைய வசதி கட்டணங்கள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், தமிழக அரசின் இந்த அற்புத திட்டத்திற்குப் பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது (Govt Low Cost Internet Facility).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்