Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,329.19
322.58sensex(0.40%)
நிஃப்டி24,870.15
120.30sensex(0.49%)
USD
81.57
Exclusive

National Technology Day 2022: தொழிநுட்ப தினத்தில்...உலகின் தலைசிறந்த...விஞ்ஞானிகளின் பட்டியல்!

Priyanka Hochumin May 11, 2022 & 10:35 [IST]
National Technology Day 2022: தொழிநுட்ப தினத்தில்...உலகின் தலைசிறந்த...விஞ்ஞானிகளின் பட்டியல்!Representative Image.

National Technology Day 2022: இன்று நம் நாட்டின் தேசிய தொழிநுட்ப தினம். இன்று நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக அயலாது உழைத்து, அறிவியல் மற்றும் தொழிநுட்ப துறையில் புரட்சியை உருவாக்கிய விஞ்ஞானிகள் பற்றி பார்ப்போம்.

மனிதர்களுக்கு ஆறாம் அறிவை சிந்திக்க பயன்படுத்தும் வகையில் படைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மனிதர்கள் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர். முதலில் இரண்டு கல்லை உரசி தீ மூலம் ஒளியை உருவாக்கினர். பின்பு அதனை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தி ஒளியை உருவாக்கினர். இதுபோன்ற நிறைய விஷயங்கள் உள்ளன. இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் இவை இல்லை என்றால், நம்மால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.  

சரி இன்று தேசிய தொழிநுட்ப தினத்தை (National Technology Day 2022) சிறப்பாக கொண்டாட, நம் நாட்டின் முக்கிய விஞ்ஞானிகள் பற்றி தெரிந்துகொள்வோம். இவர் இந்தியாவில் மட்டும்மல்ல உலகளவில் தங்களின் கண்டுபிடிப்பால் மக்களை பிரமிக்க வைத்துள்ளனர். 

தேசிய தொழில்நுட்ப தினத்திற்கான...சிறப்பு காரணம் முக்கியத்துவம்...தெரியுமா?

1. சி வி ராமன் | Indian Scientists 

பிறப்பு: 7 நவம்பர், 1888

இறப்பு: 21 நவம்பர், 1970

சந்திரசேகர வெங்கட ராமன் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். இவர் இயற்பியலில் (Physics) ஒளிச் சிதறல் (scattering of light) கண்டுபிடிப்பில் தனது பணிக்காக நோபல் பரிசு வென்றார். முதல் ஆசிய மற்றும் வெள்ளை நிறம் அல்லாது நோபல் பரிசு பெற்ற முதல் நபர் இவரே. 

இவரின் கண்டுபிடிப்பு | Indian Scientists Inventions

ஒரு வெளிப்படையான பொருளை ஒளி கடக்கும் பொழுது, அதில் ஒரு சில திசைதிருப்பப்பட்ட ஒளி அலைநீளத்தில் (wavelength) மாறுகிறது என்பதை கண்டுபிடித்தார். இவரின் இந்த கண்டுபிடிப்பு ராமன் சிதறல் (Raman scattering) என்று அழைக்கப்படுகிறது. 

மேலும் இவர் இசைக்கருவிகளின் ஒலியியலிலும் பணியாற்றினார். நமது பாரம்பரிய கருவியான தபேலா மற்றும் மிருதங்கம் போன்ற இந்திய டிரம்ஸ்களில் ஒலியின் இசையமைப்பை முதலில் ஆராய்ந்தவர்.

2. ஹோமி ஜே. பாபா | Indian Scientists Name

பிறப்பு: 30 அக்டோபர், 1909

இறப்பு: 24 ஜனவரி, 1966

இவர் இந்தியாவில் பம்பாய் நகரில் பிறந்தார். குவாண்டம் தியரியில் ஹோமி ஜஹாங்கீர் பாபா முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவரான நபர் இவர் தான். 

இவரின் கண்டுபிடிப்பு | Indian Scientists Inventions

இவர் தனது அறிவியல் வாழ்க்கையை கிரேட் பிரிட்டன், அணு இயற்பியலில் (nuclear physics) தொடங்கினார். பின்பு இவர் இந்தியாவுக்கு திரும்பி, நாட்டின் அணுசக்தி கண்டுபிடிப்புகளை மேம்படுத்த உதவினார். அப்பொழுது மத்திய அரசான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அதிலும் குறிப்பாக ஜவாஹர்லால் நேருவை லட்சிய அணுசக்தி திட்டத்தைத் தொடங்கச் செய்ய வலியுறுத்தினார். பிறகு அதை வெற்றிகரமாக செயல்படுத்தியால், இவர் இந்திய அணுசக்தியின் தந்தையாக அங்கீகரிக்கப்படுகிறார். 

3. வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் | Indian Scientists in Tamil

பிறப்பு: 19 மே, 1929

இறப்பு: 3 மார்ச், 2011

இவர் சென்னையின் புறநகர்ப் பகுதியான தொண்டரிப்பேட்டையில் பிறந்தவர். இந்தியாவில் இருந்த விண்வெளி விஞ்ஞானிகளில் உலகப் புகழ்பெற்ற நபர்களில் இவரும் ஒருவர். மேலும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 

இவரின் கண்டுபிடிப்பு | Indian Scientists Inventions

இவர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற வானியற்பியல் வல்லுநர் ஆவார். கூடுதலாக, அல்ட்ராலைட் விமானங்கள் மற்றும் பாய்மரப் படகுகளுக்கான வடிவமைப்பு மற்றும் புனையலுக்கும் (fabrication) பெயர் பெற்றவர். இவரின் கவனிப்பு அல்லது அவதானிப்புகள் மற்றும் தியரிடிக்கள் நுண்ணறிவு - பல்சர்கள், விண்மீன் மேகங்கள் (interstellar clouds), விண்மீன் கட்டமைப்புகள் (galaxy structures) மற்றும் பல்வேறு வான உடல்களை (celestial bodies) சுற்றியுள்ள பல மர்மங்களை அவிழ்க்க பெரும் உதவு புரிந்தது. 

4. ஸ்ரீனிவாச ராமானுஜன் | Indian Scientists 

பிறப்பு: 22 டிசம்பர், 1887

இறப்பு: 26 ஏப்ரல், 1920

தமிழ்நாட்டில் பிறந்த மாபெரும் கணிதவியலாளர் மற்றும் தன்னியக்க வல்லுநர் ஆவார். இவருக்கு கணிதத்தில் எந்த ஒரு முறையான பயிற்சியும் இல்லாதவர். ஆனால் இவரின் கண்டுபிடிப்பு உலகையே ஆசிரியத்தில் ஆழ்த்தியது. 

இவரின் கண்டுபிடிப்பு | Indian Scientists Inventions

இப்படி ஒரு மாமனிதர், கணித பகுப்பாய்வு, எண் கோட்பாடு, எல்லையற்ற தொடர்கள் மற்றும் தொடர்ச்சியான பின்னங்களுக்கு தந்து பங்களிப்பை செலுத்தி சாதனை படைத்துள்ளார். இவரின் வீட்டில் தங்கியிருந்த இரண்டு கல்லூரி மாணவர்களின் புத்தகங்களுடன் கணித அறிவை 11 வயதிற்குள் கற்றுக்கொண்டார். பின்பு எஸ்.எல். லோனி எழுதிய மேம்பட்ட முக்கோணவியல் இவருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து வெறும் 2 ஆண்டுகளில் அதை முழுமையாக முடித்துவிட்டார். எனவே, தனது 13 வயதிற்குள் அவற்றில் தேர்ச்சி பெற்றார், பின்பு அதிநவீன கோட்பாடுகளை தானே கண்டுபிடித்தார்.

இவர் பிறந்த மாநிலமான தமிழ்நாட்டில் இவரின் பிறந்த நாள் டிசம்பர் 22-ஐ "மாநில தகவல் தொழில்நுட்ப தினம்" என்று கொண்டாடப்படுகிறது. இது அவரை கௌவரப்படுத்த மற்றும் நினைவுகொள்ள ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 

5. APJ அப்துல் கலாம் | Indian Scientists Name

பிறப்பு: 15 அக்டோபர், 1931

இறப்பு:  27 ஜூலை, 2015

அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் தமிழ்நாட்டில் பிறந்த மற்றொரு சகாப்தம் இவர். இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ஆகியவற்றில் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். 

இவரின் கண்டுபிடிப்பு | Indian Scientists Inventions

இவர் தனது பணியை, இந்திய ராணுவத்திற்காக சிறிய ஹெலிகாப்டரை வடிவமைப்பதன் மூலம் தொடங்கினார். மேலும் புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் கீழ் பணிபுரியும் INCOSPAR குழுவில் ஒரு அங்கமாக இருந்தார். 1969 இல், அப்துல் கலாம் அவர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ISRO) மாற்றப்பட்டார். அங்கு இவர் 1980-ல் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ரோகிணி செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்திய இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் ஏவுகணை வாகனத்தின் (SLV-III) திட்ட இயக்குநராக இருந்தார். 

இப்படி இவரின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இவர் இந்திய நாட்டின் 11வது ஜனாதிபதியாக இருந்தார்.

இதுபோன்று பீர்பால் சாஹ்னி, விக்ரம் சாராபாய், மேகநாத் சாஹா மற்றும் பல விஞ்ஞானிகள் (Indian Scientist Name List) பல்வேறு தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துள்ளனர். இன்று (National Technology Day 2022) அவர்களை நினைவுகூர்ந்து, அவர்களை கௌவரப்படுத்தும் நாள். 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்