Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,291.90
285.29sensex(0.35%)
நிஃப்டி24,855.10
105.25sensex(0.43%)
USD
81.57
Exclusive

NOKIA G21 & G11 SPECIFICATION IN TAMIL: இன்றுமுதல் சந்தைபடுத்தபடும் Nokiaவின் புதிய பட்ஜட் smartphone! இவ்வளவு குறைவான விலையிலா!

Manoj Krishnamoorthi April 26, 2022 & 11:15 [IST]
NOKIA G21 & G11 SPECIFICATION IN TAMIL: இன்றுமுதல் சந்தைபடுத்தபடும் Nokiaவின் புதிய பட்ஜட் smartphone! இவ்வளவு குறைவான விலையிலா!Representative Image.

தொலைப்பேசி என்றால் நம்மில் பலபேருக்கு நம்பிக்கையான பிரண்ட்  NOKIA தான்,  இந்தியாவில் தொலைப்பேசி கலாச்சாரம் உருவானதில் இருந்து நம்முடன் பயணிக்கும் செல்போன் நிறுவனம் NOKIA,அடிப்படை டிசைன் மொபையில் இருந்து ஸ்மார்ட்போன் மொபையில் வரை அனைத்திலும் வகை செல்போன்களும் தரமான முறையில் தரும் நிறுவனமாகும்.

இந்தியாவில் மக்கள் செல்போன் பயன்படுத்த தொடங்கிய 90 களிலிருந்து அதிகமான மக்கள் பயன்படுத்திய பிராண்ட் NOKIA ஆகும், இன்று 26.04.2022 (செவ்வாய்) அன்று NOKIA G சீரியஸில் புதிய 2 மொபையில் போன் பட்ஜட் விலையில் அறிமுகப்படுத்துள்ளது. NOKIA G21 & G11 ஆகிய இவ்விரண்டு ஸ்மார்ட்போன்களுமே இன்று நண்பகல் 12:00 மணி முதல் இந்தியா முழுவதும் சந்தைப்படுத்த போகிறது.

சிறப்பு அம்சங்கள் (NOKIA G21 & G11 SPECIFICATION IN TAMIL)  

NOKIA G20 வெற்றியைத் தொடர்ந்து 6.5 inch IPS LCD அம்சத்துடன் HD Camera கொண்ட புதிய NOKIA G21 மொபையிலை அறிமுகப்படுத்த உள்ளது. NOKIA G21 மற்றும் NOKIA G11 ஆகிய இரண்டும் அதிக ஒரெ ஹாட்வேர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. 

நோக்கியா G21 ஆனது Unisoc T606 செயலியைக் கொண்டிருக்கும். இது 6 ஜிபி ரேம் (RAM) மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும். USB Type-C வழியாக 18W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5050 mAh பேட்டரியை இந்த போன் பேக் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கேமரா பொருத்தவரை 8MP செல்பி கேமரா, பின்புறத்தில் 3 camera உடன் (50MP- மெயின் கேமரா, 2MP மெக்ரோ கேமரா, 2MP ஆழம் சென்சார் )  கொண்டது.  

ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்  இரண்டு வருட ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் மூன்று வருட பாதுகாப்பு இணைப்புகளைக் கொண்டதது என NOKIA நிறுவனம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் போனுடன்  3.5mm ஹெட்ஃபோன் ஜாக், USB Type-C போர்ட், 4G VoLTE, ப்ளூடூத், ஜிபிஎஸ், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், வைஃபை போன்றவை வரும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

    


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்