Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Recording Apps Banned: இனி ஒரு பய பேசுறத ரெகார்ட் பண்ண முடியாதே!

Priyanka Hochumin April 22, 2022 & 20:15 [IST]
Recording Apps Banned: இனி ஒரு பய பேசுறத ரெகார்ட் பண்ண முடியாதே!  Representative Image.

Recording Apps Banned: தொழில்நுட்ப புரட்சியால் நிறைய புது புது கருவிகளை கண்டுபிடித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க அதனுள் இருக்கும் ஓட்டைகளை கண்டுபிடித்து தவறான முறையில் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் தொழில்நுட்ப கருவியில் ஒன்று ஸ்மார்ட்போன். இப்பொழுது இது இல்லாமல் உலகம் இல்லை என்னும் நிலைக்கு மாறியுள்ளது. ஆனால் இதை எதற்கு பயன்படுத்த வேண்டுமோ அதை தவீர மற்ற வேலைகளுக்கு உபயோகின்றனர். 

அவற்றுள் மிகவும் தவறான ஒன்று ஒருவரின் அனுமதி இல்லாமல் அவர்களை வீடியோ எடுப்பதும், அவர்கள் பேசுவதை ரெகார்ட் செய்வதும் தண்டனைக்குரிய செயலாகும். அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளை பதிவு செய்ய பயன்படுத்தப்படும் செயலிகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மே 11 ஆம் தேதி முதல் கால் ரெகார்டிங் செய்ய பயன்படுத்தும் செயலிகளை முடக்கப்போவதாக தெரிவித்த கூகுள், சமீபத்தில் கூகுள் பிலே ஸ்டோர் செயல்பாட்டில் சில மாற்றங்களை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளை ரெகார்டிங் செய்யும் செயலிகளை நீக்கும் அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. 

அது என்னவென்றால், மே 11க்குப் பிறகு பில்ட்-இன் கால் ரெக்கார்டர் இல்லாமல் ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் அழைப்புகளைப் பதிவுசெய்ய முடியாது. இருந்தாலும் என்எல்எல் ஆப்ஸ் மூலம் Reddit யூசர்கள் கூகுளின் புதிய விதிகள் பற்றி ஆராய்ச்சி செய்த பொழுது, மூன்றாவது தரப்பு செயலிகளை மட்டுமே புதிய மாற்றங்கள் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மொபைலில் default ஆக இருக்கும் கால் ரெக்கார்டிங் அம்சம் வழக்கம்போல் செயல்படும் எனவும், உங்கள் போனில் அழைப்பு பதிவு விருப்பம் இருந்தால் அதை நீங்கள் உபயோகித்து கொள்ளலாம் எனவும் டெக் வல்லுநர்கள் கூறியுள்ளனர். 

இந்த புதிய விதிமுறைகள் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்தும். பிளேஸ்டோரில் இருக்கும் கால் ரெக்கார்டிங் செயலிகளை முதன்மையாக நீக்கும் வகையில் இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு முற்றிலும் தனிநபரின் பாதுகாப்பை உறுதி படுத்தும் நோக்கில் செயலுக்கு கொண்டு வரவுள்ளது என்று கூறினர். 

உலகளவில் கூகுள் நிறுவனம் மீது தனிநபரின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் அதிகமாக எழும்புகிறது. எனவே, இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்துவதாக கூறினர். இதனை தெரிந்துகொண்டு உங்கள் போனில் அது போன்ற செயலிகள் இருந்தால் அதனை உடனே அகற்றி விடுங்கள்.     

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்