Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Snapchat Selfie Drone: ஸ்னேப்சேட் இருக்கா..? இனி பறந்துகிட்டே செல்ஃபி எடுக்கலாம்….

Gowthami Subramani May 02, 2022 & 11:55 [IST]
Snapchat Selfie Drone: ஸ்னேப்சேட் இருக்கா..? இனி பறந்துகிட்டே செல்ஃபி எடுக்கலாம்….Representative Image.

Snapchat Selfie Drone: ஸ்னேப்சேட்டில் தற்போது புதிதாக அறிமுகமான டெக்னாலஜியின் மூலம், பறந்து கொண்டே செல்ஃபி எடுக்கும் அற்புதமான யுக்தி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் டெக்னாலஜியில், எப்போதும் புதிய புதிய அப்டேட்டுகள் கொண்டு வரப்படுகின்றன. போன் என்ற ஒன்று இருந்தாலே, நாம் முதலில் சரிபார்ப்பது கேமராவைத் தான். இப்போதெல்லாம், விதவிதமான போட்டோக்களை எடுக்கின்றனர்.

போட்டோக்கு போஸ் கொடுத்தால் போது, எல்லா எடிட்டுகளும் அதுவே தரும். இந்த அளவிற்கு வந்த டெக்னாலஜியில் நாம் இப்போது பயன்படுத்திக் கொண்டிருப்பது தான் ஸ்னேப் சேட் செயலி. இந்த செயலியின் மூலம், போட்டோக்களை நமக்கு ஏற்றாற்போல மாற்றி எடிட் செய்து கொள்ளலாம்.

தற்போது, இந்த அப்ளிகேஷன் பெரும்பாலும் அனைவராலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த அப்ளிகேஷன் போட்டோ எடுப்பது மட்டுமல்லாமல், சேட் செய்யவும் உதவுகிறது. இன்ஸ்டக்ராமைப் போல, ஸ்டோரிஸ் ஆப்ஷனும் இந்த செயலியில் உள்ளது. அது மட்டுமல்லாமல், கூகுள் மேப்-ஐப் போல, இதில் ஸ்னேப் மேப் உள்ளது. அதனைத் தொடர்ந்து கேமியோஸ் செல்ஃபி என்ற ஆப்ஷனும்  உள்ளது. இது போன்ற நிறைய வகையான ஆப்ஷன்ஸ்களைப் பயன்படுத்தி, நாம் போட்டோ எடுத்துக் கொள்ளலாம்.

இதில் தற்போது புதிதாக வந்த அப்டேட், ஃப்ளையிங் கேமராவைப் பயன்படுத்துதல். இது ஸ்னாப்சேட்டிற்கு மிகவும் பிரபலமான ஒரு அப்டேட்டாக இயங்க உள்ளது.

அதாவது, Pixy என அழைக்கப்படக் கூடிய மஞ்சள் நிற ட்ரோன் (Flying Camera Done), செல்ஃபி ஸ்டிக் இல்லாமல் செல்ஃபி எடுப்பதற்காக உதவுகிறது. இது ஃப்ரீ-ஃப்ளையிங் சைட்கிக் என்ற நிறுவனத்தால் விவரிக்கப்படும்.

இந்த கேஜெட் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் கிடைக்கிறது. மேலும், இங்கிலாந்தை விட இந்தப் பகுதியில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான சட்டங்கள் மிக மென்மையாக உள்ளன என்று கூறப்படுகிறது.

தற்போது, சமூக ஊடக ஜாம்பவான்கள் தங்களது வன்பொருள் மற்றும் ஆக்மென்ட் ரியாலிட்டு போன்ற சலுகைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், இந்த Pixy தானாக இயங்கக் கூடிய திறன் படைத்தது. மேலும், இது பறக்கும் போது வீடுயோ எடுக்கக் கூடியதாக அமைய உள்ளது. Wireless முறையில் இது இயங்கி வருகிறது. இது போல பறக்கும் போது செல்ஃபி ட்ரோன் நம் உள்ளங்கையில் வந்து இறங்கும்.

இது போன்ற அப்டேட்டுகள் பயனர்களை மிக விரைவாகக் கவருபவையாக உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்