Sat ,Oct 19, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Thala Ajith Mentors Drone Technology: அஜித் ரேசர் மட்டும் இல்லை ஒரு Mentor-ம் கூட! Technology-ல என்னெல்லாம் பன்னிருக்காருன்னு பாருங்க!

Priyanka Hochumin April 30, 2022 & 21:45 [IST]
Thala Ajith Mentors Drone Technology: அஜித் ரேசர் மட்டும் இல்லை ஒரு Mentor-ம் கூட! Technology-ல என்னெல்லாம் பன்னிருக்காருன்னு பாருங்க!Representative Image.

Thala Ajith Mentors Drone Technology: மே 1 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாட இருக்கும், மக்களால் செல்லமாக தல என்று அழைக்கப்படும் அஜித் குமார். இவர் ஒரு நல்ல நடிகர், ஒரு ரேசர், ஒரு வழிகாட்டி, அதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர். இதையும் தாண்டி தொழில்நுட்ப துறையில் இவர் சிறந்து விளங்கும் சில அறிய செய்திகள் இதோ. 

தல அஜித் ரேசர் 

90's மற்றும் 2000-களில் காதல் மன்னன் என்று அழைக்கப்படும் தல அஜித் ஒரு பைக் பிரியர். இவர் பைக் ரேசர் மட்டுமல்லாமல் ஒரு கார் ரேசரும் கூட. படங்களில் இவர் நடிக்கும் இந்த ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் தானாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மங்காத்தா மற்றும் வலிமை போன்ற படங்களில் பைக் ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் ரசிகர்களால் வரவேற்பை பெற்றது. இவர் சினிமா துறையில் மட்டும் சூப்பர் டாப்ல இருப்பாரு என்று நினைத்தால், நிஜ வாழ்க்கையிலும் டாப்ல இருக்கிறார். இவர் மிகவும் எளிமையானவர், மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்கு சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளார். 

Also ReadAjith Kumar Life History Tamil: பர்த்டே ஸ்பெஷல்… தல அஜித்குமாரின் கூலான லைஃப் ஸ்டைல்…

பயிற்சி பெற்ற விமானி

இவர் கார், பைக் தான் பட்டைய கிளப்புவாருன்னு பார்த்தா? ஜெட்டும் ஓட்டுவாராம். இதையெல்லாம் பார்க்கும் பொழுது இவர் ஒரு மல்டிடேலண்டட் மாமனிதர். சினிமா நட்சத்திரமான இவர் ஒரு பயிற்சி பெற்ற விமானியாவார். மேலும் இவர் ராணுவத்தினர் பயன்படுத்தும் போர் விமானத்தை பயன்படுத்தும் வல்லமைக் கொண்டவர். இந்தியாவில் பைலட் உரிமம் பெற்ற நடிகர்களுள் இவரும் ஒருவர். இவருக்கு எப்போதெல்லாம் விமானம் பயன்படுத்த விரும்பினால் சென்னையில் உள்ள பறக்கும் கிளப்பில் பயிற்சி செய்வார். இப்படி இவரை பற்றிய விஷயங்கள் ஒவ்வொன்றாக கேட்கும் பொழுது, ச்ச! என்ன மாறியது மனுஷன்யா இவரு! என்று தோன்றுகிறது.  

 

                

 

UAV சிஸ்டம் ஆலோசகர் 

இவர் இதுமட்டும் இல்லைங்க, ஏரோமாடலிங் மற்றும் டிரோன் போன்ற ரிமோட் கண்ட்ரோல் வாகனங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்டவர். இதற்கு சான்று 2018 ஆம் ஆண்டு UAV சேலஞ்ச் மெடிக்கல் எக்ஸ்பிரஸ் என்ற நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்கும் MIT மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தல அஜித் அவர்கள் 'ஹெலிகாப்டர் சோதனை பைலட் மற்றும் யுஏவி சிஸ்டம் ஆலோசகர்' பதவிக்கு நியமிக்கப்பட்டார். "Dhaksha" என்ற பெயருடன் போட்டிக்குச் சென்ற இவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். அஜித்தின் உதவியாலும், மாணவர்களின் திறமையாலும் ட்ரோன் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கினர்.  இந்த சவாலான முயற்சி மருத்துவ மாதிரிகள் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு மற்றும் நோயாளிகளுக்கு மருந்து வழங்குவதற்கும் ஒரு ரோபோ விமானத்தை பயன்படுத்துவதற்கு இந்த ட்ரோனை உருவாக்கினர்.

 

                

 

இதில் தனது பங்கை அளித்த அஜித் அவர்களை கெளரவப்படுத்த ரூ.1000/- வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் நலனுக்காக வாங்கிவிட்டார். இவர்கள் உருவாக்கி இந்த ட்ரோனின் சிறப்பு என்னவென்றால், இலக்கை நோக்கிச் செல்ல சாப்ட்வேரால் இயக்கப்படுகிறது. பொதுவாக ட்ரோன்கள் கையில் வைத்திருக்கும் ரிமோட் மூலம் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த ட்ரோன் பெட்ரோலைப் பயனப்டுத்துகிறது. மேலும் விடாமல் 6 மணிநேரத்திற்கும் அதிகமாக பறக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.  

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்