Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,291.90
285.29sensex(0.35%)
நிஃப்டி24,855.10
105.25sensex(0.43%)
USD
81.57
Exclusive

Things Elon Musk may Change in Twitter: மஸ்க்கின் அடுத்த பிளான்...ட்விட்டரில் வரப்போகும் மாற்றங்கள்...இது தானா?

Priyanka Hochumin April 26, 2022 & 11:30 [IST]
 Things Elon Musk may Change in Twitter: மஸ்க்கின் அடுத்த பிளான்...ட்விட்டரில் வரப்போகும் மாற்றங்கள்...இது தானா?Representative Image.

Things Elon Musk may Change in Twitter: ட்விட்டரை கைப்பற்ற பல நாளாக பேச்சு வார்த்தை நடந்து இன்று ஒரு வழியாக வாங்கிவிட்டார் எலான் மஸ்க். அதை வாங்கியவுடன் டெஸ்லாவின் நிர்வாகி, இந்த சோசியல் மீடியாவில் சில மாற்றங்களை கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ட்விட்டர் கைமாற்றம் பற்றிய முழு விவரம் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள். 

இன்று மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய தகவல் வெளியானதை தொடர்ந்து, அடுத்து ட்விட்டரில் எந்தெந்த மாற்றங்களை கொண்டு வரலாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன் விவரங்கள் இதோ.

1. எடிட் பட்டன் அறிமுகம்:

இந்த மாத தொடக்கத்தில் மஸ்க் தந்து ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மக்களிடம் உங்களுக்கு ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டுமா? என்ற கேள்விக்கு சுமார் 74% பேர் "ஆம்" என்று பதிலளித்துள்ளனர். அதன் பிறகு, வாக்கெடுப்பு முடிவைப் பொருட்படுத்தாமல்  எடிட் பட்டனில் வேலை செய்ய தொடங்கியது ட்விட்டர். மேலும் ட்விட்டர் தலைமை நிர்வாகி பாரக் அகர்வால், வாக்கெடுப்பில் பொருத்தமான விருப்பத்தைத் தேர்வுசெய்யுமாறு பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், ஏனெனில் இது முக்கியமான ஒன்றாகும். 

               

2. சுதந்திரமான பேச்சுக்கான தளம்:

இந்த பிளாட்பார்ம் அதன் ஆற்றலுக்கு தகுந்த அளவுக்கு செயல்படவில்லை என்று மஸ்க் நம்புகிறார். மேலும் நான் ட்விட்டரை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கவில்லை என்வும், என்னுடைய ஒரே குறிக்கோள் மக்களால் சுதந்திரமாக பேசுவதற்கான தளமாக கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டும் தன என்று கூறினார். 

இதுவரை ட்விட்டர், மற்ற தளங்களைக் காட்டிலும் அவர்களின் சட்ட திட்டங்களை மீறுபவர்களின் அக்கௌன்டுகளை முடக்கியுள்ளனர். இந்த காரணங்களுக்காக டொனால்டு டிரம்ப் அவர்களின் அக்கௌன்டை அவர்கள் முடக்கியது அவரை பின்பற்றியவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மஸ்க் தன்னை "சுதந்திரமான பேச்சு முழுமைவாதி" என்று தன்னை விவரித்துள்ளார். இருப்பினும் தன்னுடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ட்விட்டர் பயனர்களை பிளாக் (block) செய்துள்ளார். இந்த கருது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. 

மேலும் நேற்று திங்களன்று மஸ்க் போட்ட ட்வீட்டில், தனது மோசமான விமர்சகர்கள் கூட இந்த தளத்தில் தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் அது தான் பேச்சு சுதந்திரம் என்று கூறியுள்ளார். 

               

3. Lengthy-யான ட்வீட்கள்:

டெஸ்லாவின் நிர்வாகி நீண்ட வடிவ ட்வீட்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். தற்போது ட்விட்டரில் 280 வார்த்தைகள் மட்டுமே உபயோகிக்க முடியும். இது 2017 ஆம் ஆண்டு 140 வார்த்தைகளில் இருந்து அதிகரிக்க பட்டதாகும். இதை பற்றிய மஸ்க்கின் ட்வீட் கூறியது, " ட்விட்டர் நீண்ட வடிவ ட்வீட்களுக்கு காலதாமதமாக உள்ளது என்பதே இந்த நூலின் நாவலில் இருந்து எனது மிக உடனடியான கருத்து" என்பதாகும். 

4. ஸ்பேம் போட்கள் மற்றும் அங்கீகாரம்: 

கடந்த வரம் மஸ்க் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் தனது ட்விட்டர் ஏழாம் வெற்றிகரமாக முடிந்தால் ஸ்பேம் போட்களை தோற்கடிக்க முயற்சிப்பேன் எண்டு கூறியுள்ளார். மேலும் தந்து உரிமையின் கீழ் இருக்கும் அனைத்து உண்மையான மனிதர்களையும் தளம் அங்கீகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். 

 

               

5. ட்விட்டர் அல்காரிதம்:

இந்த மாதம் நடைபெற்ற TED கான்பெரென்ஸின் போது, மஸ்க் நிறுவனத்தின் அல்காரிதத்தை ஓபன் சோர்ஸ் மாடலாக மற்றும் திட்டத்தை பற்றி விரிவாக விளக்கியுள்ளார். மேலும் இதன் மூலம் பயனர்கள், அவர்களின் காலவரிசையில் போஸ்ட் எப்படி வந்தன என்பதற்கான code-ஐ பார்க்க முடியும் என்றுள்ளார்.  

               

இதற்கான விளக்கம், என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய நுண்ணறிவு இல்லாமல் மர்மமான முறையில் விளம்பரப்படுத்தப்படுவதையும் தரமிறக்கப்படுவதையும் விட ஓபன் சோர்ஸ் முறை சிறந்தது என்று கூறினார்.     

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்