Tue ,Jul 02, 2024

சென்செக்ஸ் 79,534.68
58.49sensex(0.07%)
நிஃப்டி24,151.85
9.90sensex(0.04%)
USD
81.57
Exclusive

Whatsapp undo Update: வாட்ஸ்அப் பயனர்கள் எதிர்பார்க்கும் undo அப்டேட்...கூடிய விரைவில்! இனி ஜாலி தான்

Priyanka Hochumin June 07, 2022 & 18:50 [IST]
Whatsapp undo Update: வாட்ஸ்அப் பயனர்கள் எதிர்பார்க்கும் undo அப்டேட்...கூடிய விரைவில்! இனி ஜாலி தான்Representative Image.

Whatsapp undo Update: மக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய இன்ஸ்டன்ட் மெசேஜ் ஆப் ஆன வாட்ஸ்அப்பில் டெலீட் செய்த மெசேஜ்களை மீட்டெடுக்க undo ஆப்ஷன் வரப்போகிறது.

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் புது புது அப்டேட்களை வெளியிட்டு மக்களின் குறைகளை தீர்த்து வருகிறது. பொதுவாக ஒரு அப்டேட் வெளியான பிறகு அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்து அடுத்த அப்டேட்டை வெளியிடுவார்கள். இது வாட்ஸ்அப்பிற்கு மட்டும் இல்லாமல் அணைத்து செயலிகளுக்கும் பொருந்தும்.

Apple iOS 16: ஐபோனில் வந்துள்ள புதிய iOS 16 அப்டேட்! என்னென்ன புதுசா இருக்க பாருங்க!

அந்த வகையில், வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள அப்டேட் ஒன்றில் பயனர் தவறுதலாக ஒரு மெசஜை அனுப்பினால் அதனை மாற்ற 'delete for me' மற்றும் 'delete for everyone' என்னும் இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 'delete for everyone' என்றால் மெசேஜ் அனுப்பியவர் மற்றும் வாங்குபவர் என்று அனைவருக்கும் அந்த டெலீட் செய்யப்படும். இதுவே 'delete for me' என்றால், யார் மெசேஜ் அனுப்பினார்களோ அவருக்கு மட்டும் அந்த மெசேஜை டெலீட் செய்யும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு சில நேரம் தவறுதலாக அவர்கள் அழுத்துவதால் சில முக்கிய டேட்டாக்கள் டெலீட் செய்யப்படுகிறது. அதனை அவர்களால் திரும்பிப் பெற இயலவில்லை. இது குறித்த குறைகளை பயனர்கள் தெரிவித்தனர், அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த புது அப்டேட் வெளிவர உள்ளது. இது நீங்கள் தவறுதலாக ஒரு மெசேஜை டெலீட் செய்துவிட்டால் ஷ்கிரீனின் கீழ் பகுதியில் undo என்று தோன்றும். இது சில நொடிகளுக்கு மட்டுமே செயல்படுவதால், அதற்குள் டெலீட் செய்யப்பட்ட மெசேஜை undo பட்டனை அழுத்தி மீட்டெடுக்கலாம். இந்த தகவலை வாட்ஸ்அப்-பின் முக்கிய தகவல்களை வெளியிடும் WABetaInfo ஸ்கீரின்ஷாட்டுடன் வெளியிட்டுள்ளது.

EPFO Balance Verification: உங்க PF பேலன்ஸ் செக் பண்ண இத விட பெஸ்ட் ஆப்ஷன் எதும் இருக்காது!

இதை வாட்ஸ்அப்-க்கு மட்டும் தான் புதுசா, ஆனால் ஜிமெயில் டெலிகிராம் போன்ற செயலிகளில் undo ஆப்ஷன் ஏற்கனவே உள்ளது. பார்க்கலாம் இந்த அப்டேட் வந்தவுடன் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று.

Whatsapp undo Update, Whatsapp undo deleted messages, Whatsapp undo delete, Whatsapp undo button, Whatsapp undo delete message for me, undo delete for me whatsapp, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்