இந்த உலகம் ஒரு நாடக மேடை. நொடிக்கு நொடி தனது காட்சிகளை மாற்றிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் இணையமும் ஒரு நாடக மேடை தான். ஒவ்வொரு பரிமாணமும் மக்களை மாற்றிக்கொண்டே இருக்க செய்கிறது.மேலும், 2G வந்த போது படிக்கும் பழக்கத்தை மாற்றி passive ஆக chat செய்யும் முறைக்கு மாறினோம்.
அப்போது blogging பெறும் அளவில் பேசப்பட்டது. 3G வந்த போது, வீடியோ ஓடும் பட்டுனு என படிப்பதை சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்து, வீடியோ பின்னாடி போக ஆரம்பித்தோம். ஒரு காலத்தில் வீடியோ லோடு ஆகவே அதிக நேரம் எடுத்தாலும், இப்பொழுது 4G காலத்தில் வீடியோ தான் பலருக்கு வாழ்க்கை தரும் பொருட்டு ஆகிய சூழ்நிலையில் இப்பொழுது 15 நொடி உள்ள வீடியோக்கு மேல் யாரும் பார்க்க தயங்குகிறோம். அப்படியானால், 5G வந்தால், வேற என்ன, எல்லாரும் Metaverse ல மிதந்துவிட்டு உடல் இயக்கத்தை மறந்து இருப்போம்.
அந்த வகையில் ஓர் காலத்தில் உங்களுக்கு எவ்வளவு மொழி தெரிந்து புலமையுடன் இருக்கிறோமோ , அவர்களை பண்டிதன் என்பார்கள். ஆனால், இப்பொழுது எவ்வளவு programming languages (நிரல் மொழியாக்கம்) தெரிந்து உள்ளதோ அவர்களே பிறரை ஆள்கின்றனர். Whitehatjr என்னும் நிறுவனம் (Byju’s Owned company) சிறு குழந்தைகளை programming languages தெரிய வைக்கும் முயற்சியில் இறங்கி வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
இது போல நாமும் சமுதாயத்தில் மாற்றத்தை உண்டாக்க விரும்பினால், இனி blockchain மற்றும் no code போன்ற வணிகத்தில் இறங்குங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…