Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Youtube Go is being Shut down: போச்சு இனி Youtube Go இல்லை…எல்லாரும் யூடியூப்-க்கு மாறுங்க…!

Priyanka Hochumin May 04, 2022 & 19:45 [IST]
Youtube Go is being Shut down: போச்சு இனி Youtube Go இல்லை…எல்லாரும் யூடியூப்-க்கு மாறுங்க…!Representative Image.

Youtube Go is being Shut down: இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் Youtube Go ஆப் நிறுத்தப்படப்போகிறது. கூகுள்  நிறுவனம் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை தங்களின் சப்போர்ட் பேஜ் மூலம் வெளியிட்டது. 

எனவே, search giant Youtube Go பயனர்களை மெயின் Youtube பயன்பாட்டிற்கு மாற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும் அவர்கள் வெப் பிரௌசர்கள் மூலம் வெப்சைட்டை நேரடியாக ஆக்சஸ் செய்யலாம். 

Youtube Go எப்போது வெளியானது?

இந்த யூடியூப் கோ ஆப்ஸ் 2016 ஆம் ஆண்டு குறைந்த வன்பொருள் (அதாவது low-end hardware) அல்லது மோசமான டேட்டா இணைப்புகளைக் கொண்ட பயனர்களுக்காக வெளியிடப்பட்டது. கூடுதலாக Go வெர்சனில் "கமெண்ட், போஸ்ட், கன்டென்ட் உருவாக்குவது மற்றும் டார்க் தீமைப் பயன்படுத்துவது" என்று நிறைய முக்கிய அம்சங்கள் விடுபட்டுள்ளன. 

Youtube Go முடக்கப்படும் காரணம்?

கூகுள் ஷேர் செய்த போஸ்டின் படி, நுழைவு நிலை ஸ்மார்ட்போன்கள் (entry-level smartphones) மற்றும் மெதுவான நெட்வொர்க் இணைப்புகளில் மேம்படுத்தப்பட்ட செயல்திறனை வழங்குவதற்காக மெயின் YouTube பல ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டுள்ளது. லிமிடெட் டேட்டாவை மட்டுமே அணுகக்கூடிய பயனர்களுக்கு டேட்டா பயன்பாட்டைக் குறைக்க future updates-களை கொண்டுவருவோம் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த மேம்பாடுகள் மற்றும் முக்கிய பயன்பாட்டிற்கான திட்டமிடப்பட்ட புதுப்பிப்புகள் அனைத்தும் YouTube Go பயன்பாட்டை தேவையற்றதாக மாற்றியுள்ளன. 

2016-ல் இந்த செயலி வெளியானதில் இருந்து குறைந்த விலை ஸ்மார்ட்போன்களின் திறன்களில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆப் முழுக்க முழுக்க இந்தியாவை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இருப்பினும் இது மற்ற வளரும் சந்தைகளில் கிடைக்கிறது. மேலும் Google Play store-ல் தற்போது YouTube Go பயன்பா சுமார் 500 மில்லியனுக்கும் அதிகமான installs கொண்டுள்ளது. கடந்த 2021 அக்டோபரில் இருந்து இந்த ஆப்ஸ் புதிய அப்டேட் எதுவும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது மறைமுகமாக தெரிவிக்கும் தகவல் என்று சிலர் யூகிக்கின்றனர். 

YouTube நியூ அப்டேட் 

கூகுள் தொடர்ந்து யூடியூப் செயலிக்கு அப்டேட் மற்றும் புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட சூப்பர் தேங்க்ஸ் மூலம் பயனர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கன்டென்ட் கிரியேட்டர்ஸ் தங்கள் வீடியோக்களைப் பார்க்கும்போது டிப்ஸ் வழங்க அனுமதிக்கிறது. கன்டென்ட் கிரியேட்டர்ஸ் இந்த அம்சத்தால் விளம்பரங்களைச் சார்ந்திருப்பதை குறைகிறது. மேலும், YouTube ஒரு பிரத்யேக Podcasts ஹோம் பேஜ் கொண்டு வரவுள்ளதாக ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த வதந்தியின் மூலம் தெரியவருவது என்னவென்றால், இந்த அம்சம் மூலம் ஆடியோ மட்டும் விளம்பரங்களை பிளாட்ஃபார்மில் வரக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.    

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்