Wed ,Oct 23, 2024

சென்செக்ஸ் 80,081.98
-138.74sensex(-0.17%)
நிஃப்டி24,435.50
-36.60sensex(-0.15%)
USD
81.57
Exclusive

பன்றிக்காய்ச்சல் பரவலா..? உஷார் நிலையில் கால்நடை பராமரிப்புத்துறை...!

Bala July 21, 2022 & 13:27 [IST]
 பன்றிக்காய்ச்சல் பரவலா..?  உஷார் நிலையில் கால்நடை பராமரிப்புத்துறை...!Representative Image.

உத்தரபிரதேசம், பீகார் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து மகாராஷ்டிரா மாநில கால்நடை பராமரிப்புத்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பன்றிகள், பன்றி இறைச்சி, பன்றி இறைச்சி பொருட்கள் அல்லது பன்றி உரம் (பன்றிக் கழிவுகள் உட்பட) ஆகியவற்றை அனுமதியின்றி கொண்டு செல்வதை கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்திற்குள் எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பன்றி வளர்ப்பவர்கள், பன்றிகள் திடீரென உயிரிழந்தால் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .

இது தொடர்பாக பேசிய மகாராஷ்டிரா மாநில கால்நடை பராமரிப்புத் துறையின் இயக்குநர் தனஞ்சய் பார்கலே, இதுவரை மாநிலத்திலோ அல்லது அண்டை மாநிலங்களிலோ பன்றி காய்ச்சல் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை.  இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் என்றும், பன்றிகள், எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளை எச்சரிக்கையுடன் இருக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம், அண்டை மாநிலங்களுக்கு பன்றி இறைச்சியை அதிகளவில் விநியோக செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்